492

91. நந்தி - நந்தியாவட்டப்பூ,
1நறவம் -நறைக்கொடி,
நறு புன்னாகம் - இது புன்னையின் விசேடம்,

92. பாரம் - பருத்திப்பூ,
பீரம் - பீர்க்கம்பூ,
பைங்குருக்கத்தி - பசிய குருக்கத்திப்பூ,

93. ஆரம் - சந்தனப்பூ,
காழ்வை - அகிற்பூ, 
கடி இரு புன்னை - மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ,

94. நரந்தம் - நாரத்தம்பூ,
நாகம் - நாகப்பூ, 
நள்ளிருணாறி - 2இருவாட்சிப்பூ,

95. மா இரு குருந்தும் - கரிய பெரிய குருந்தம்பூவும், 
வேங்கையும் - வேங்கைப்பூவும்,

95-7. [பிறவு, மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன், மாலங் குடைய :] அங்கு மால் உடைய அரக்கு விரித்தன்ன பிறவும் பரு ஏர் அம் புழகுடன் - அச்சாரலிடத்துத் தம்மில் மயக்கமுடையவாய்ச் சாதி லிங்கத்தைப் பரப்பினாற்போன்ற பிறபூக்களையும் பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடனே,
பரேரம்புழகு - 3செம்பூவுமாம் ; புனமுருங்கையுமென்பர்.

97. மலிவனம் மறுகி - பூக்களிடத்தே மனவேட்கை மிக்குப் பல காலுந் திரிந்துபறித்து,

98. 4வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ - 5மழை பெய்து தன்னிடத்தைக் கழுவித் தூய்தாக்கின அகன்ற பாறையிலே குவித்து,


440:3) ; "தாய தோன்றி தீயென மலரா" (பரி. 11 : 21) ; "வாடையொடு நிவந்த வாயிதழ்த் தோன்றி, சுடர்கொ ளகலிற் சுருங்கு பிணி யவிழ", "சுடர்புரை தோன்றி" (அகநா. 235:7-8, 364:6) ; "தோன்றி யஞ்சுட ரேந்த" (சீவக. 1563) ; "தீவாய்த் தோன்றியும்" (பெருங். 2. 12:26)

1நறவம் - நறவம்பூவெனக் கொள்ளுதலும் பொருந்தும்.

2இருள்வாசியென்பது இருவாட்சி யென்று வழங்குகின்றது.

3 "செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர்" (பரி. 22:21)

4 "மாசறக் கழீஇய யானை போலப், பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்" (குறுந். 13:1-2)

5 "புனல் கால் கழீஇய பொழில் - நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப் போன பொழில்கள்" (பெரும்பாண். 380, ந.)