கண்ணேமாய் (61) மலிவனமறுகிப் (97) பரேரம்புழகுடனே (96) ஒண் செங்காந்தள் (61) முதலியவற்றையும் பிறவற்றையும் (95) பாறையிலே குவித்து (98) எனமுடிக்க. செங்காந்தள் (62) முதலியவற்றிற்கெல்லாம் இரண்டாமுருபும் உம்மையும் விரிக்க. குருந்தும் வேங்கையும் பிறவும் (95) என்ற மூன்றற்கும் உருபுவிரிக்க. 99. புள் ஆர் இயத்த - பறவைகளின் ஓசையாகிய நிறைந்த வாச்சியங்களை யுடையவாகிய, விலங்கு மலை சிலம்பின் - ஒன்றற்கொன்று குறுக்கிட்டுகிடக்கின்ற மலைப்பக்கத்திற்புனத்தே, 100-101. வள்உயிர் தெள் விளி இடைஇடை பயிற்றி கிள்ளை ஓப்பியும் - பெரிய ஓசையினையுடைய தெளிந்தசொற்களை நடுவேநடுவே சொல்லிக் கிளியை ஓட்டுதலைச்செய்தும் தழை தைஇ (102) யென்க. சொல் - 1கிளியையோட்டுஞ்சொல். கிளியையுமோப்பியெனச் சிறப்பும்மை 101. கிளை இதழ் பறியா - புறவிதழ்களை வாங்கிப்போகட்டு, 102. பை விரி அல்குல் கொய் தழை தைஇ - பாம்பின்படத்தைப் போலே பரந்த அல்குலுக்குத் தழையைக்கட்டியுடுத்து, 2கொய்தழை - மிக்கவிடங்களை நறுக்கினதழை. 103-4. பல் லேறு உருவின் வனப்பு அமை கோதை எம் மெல் இரு முச்சி கவின் பெற கட்டி - 3பலவாய் வேறுபட்ட நிறத்தையுடைய அழகமைந்த மாலைகளை எம்முடைய மெல்லிய கரியமுடியிலே அழகு பெறச்சுற்றி,
1இஃது ஆயோ வென்பது ; "ஆயோவென்னு மண்ணாமலையாரை" (திருஞா. தே.) ; "ஆயோவெனப்போகா" (சுந்தர. தே.) ; "கிளியுமெள்கு மாயோவடுந்தொண்டையோ" (திருவிருத்தம், 10) ; "புனங் காவல்கொண் டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால்" (சூளா. சுயம். 104) ; "ஆயோ வெனுங்குர லாவயிற் கடிந்தே" (தமிழ்நெறி. மேற்.) ; "ஆயோ வெனுங்குர லந்தோ புனத்தை யழிக்கின்றதே" (திருவரங்கக் கோவை) 2கொய்யென வருமிடங்களில், கத்தரிகையாலே மட்டஞ்செய்த வென்று பொருளெழுதுவர் புறப்பொருள் வெண்பாமாலையுரையாசிரியர். 3பலவகைப்பட்ட மாலைகளினியல்பைப் பின்புகுறித்த இடங்களிலுள்ள செய்யுட்களாலுணர்க : பரிபாடல், 19:80-82, 20:29-30 ; சீவக. 1338, 2054, 2656, 2919 ; பெரிய. முருக. 9.
|