140. அசை: வேறு கூட்டிற்று. மெல் சாயல் - மெல்லிய மென்மையினையும், அ வாங்கு உந்தி - அழகிய வளைந்த கொப்பூழினையும், 141. மடம் மதர் மழை கண் இளையீர் - மடப்பத்தையுடைய மதர்த்த குளிர்ந்த கண்ணினையுமுடைய இளையீரே, 141-2. இறந்த கெடுதியும் உடையேன் என்றனன் - இவ்விடத்தே போந்த கெடுதிகள் பலவுமுடையேனென்று கூறினான் ; என்றது, 1அவை 2யானை 3கலை 4பன்றி 5முதலியன கெடுத்தனனாக வினாயினான் ; குஞ்சியின்கண்ணே (112) மிலைச்சிச் (116) செரீஇப் (119) பொலியக் (112) கலாவக் (127) கட்டி (125) ஏந்தித் தெரிந்து (124) விடையின் அணிபெறவந்து (136) தான்கொண்டுவந்த ஞமலி (131) நெரி தருகையினாலே (132) எழுந்து தளர்ந்து (133) எழுந்து தளர்ந்து (133) மருண்டு வேறுபுலம் படராநிற்க (134) ஆயிடை (137) எம் (136) அலமரல் வெரூஉதலஞ்சிக்
1இங்ஙனம் வினாதலை, தோழியைக் குறையுறும் பகுதியிற் கெடுதி வினாதலென்னும் துறையுள் தொல்காப்பியனாரும் (களவு. சூ. 102 ; 11 - 3), மதியுடம்படுத்தலென்னும் பகுதியிற் பிறவினாதலென்பதனுள் இறையனாரகப் பொருளுரையாசிரியரும் (சூ. 6), பகற்குறியுள் கவர்ந்து நின்ற தோழியை மதியுடம்படுப்பானுற்றுத் தோழியும் தலை மகளுமுடனாயவழித் தலைமகன் வினாயதென்பதனுள் தமிழ்நெறிவிளக்க நூலாசிரியரும், மதியுடம்பாட்டிற்குரிய, "கயந்தங்கு வேழம் வினாத லினமான் கலைவினாதல்" என்பவற்றுள் ஒரு பழைய இலக்கண நூலாசிரியரும், பாங்கி மதியுடம்பாட்டிற் குறையுற வுணரும் பகுதியில் கெடுதியோ டொழிந்தவும் வினாதலுள் நாற்கவிராசநம்பியும் (சூ. 140) அடக்குவர். 2யானை வினாதல்்: "செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர் சிறந்த, மைம்மலி வாசப் பொழில்வகு தையன்ன வாணுதலீர், மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போன்முமுழங்கிக், கைம்மலை தான்வரக் கண்டதுண் டோநுங் கடிபுனத்தே" (பல்சந்தமாலை.) என வருவது. 3கலைவினாதல் : "அம்புமுகங் கிழித்த வெம்புண் வாய்க்கலை, மான் போந் தனவுள வோநும், மடமா னோக்க மரீஇயின படர்ந்தே" (பொருளியல்) எனவரும். 4பன்றி வினாதல் : "தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கா, லெங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார் - நுங்குறிப்பின், வென்றி படர் நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ, வன்றி படர்ந்த வழி" (தொல். களவு. சூ. 11, ந. மேற்) எனவரும். 5முதலியனவென்றது புலி, உள்ளம், உணர்வு முதலியவற்றை ; தொல். களவு. சூ. 11, ந.
|