498

(137) கிளந்து (138) ஏத்தி (139) இளையீர், இறந்த (141) கெடுதியு முடையே னென்றனன் (142) எனக் கூட்டுக.

142-3. [அதனெதிர், சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி :] அல்லாந்து அதன் எதிர் சொல்லேமாதலின் கலங்கி - அவன் கூற்றிற்கு யாங்கள் மகிழ்ந்து அதற்கு மறுமொழி கொடேமாகையினாலே நெஞ்சழிந்து,

144-5. [கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு, சொல்லலும் பழியோ மெல்லிய லீரென :] மெல் இயலீர் கெடுதியும் விடீராயின் எம்மொடு சொல்லலும் பழியோ என - மெல்லிய இயல்பினையுடையீர், கெட்டனவும் காட்டித் தாரீராயின் எம்முடன் 1ஒரு வார்த்தை சொல்லுதலும் நுமக்குப் பழியாமோ வெனச்சொல்லி,

146-8. [நைவளம் பழுநிய பாலை வல்லோன், கைகவர் நரம்பினிம்மென விமிரு, மாதர் வண்டொடு சுரும்புநயந் திருத்த :] நைவளம் பழுநிய பாலை வல்லோன் கை கவர் நரம்பின் இம்மென இமிரும் மாதர் வண்டொடு நயந்து இறுத்த சுரும்பு - 2நட்டராகம் முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிக்க வல்லவன் தன்கையாலே வாசித்த நரம்புபோலே இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும் காதலையுடைய வண்டினத்தோடே தன்னிடத்து 3மணத்தை விரும்பித் தங்கின சுரும்பினங்களை.

149. தாது அவிழ் அலரி தா சினை பிளந்து - தாதுவிரிந்த பூக்களையுடைய தழைபரந்ததோர் கொம்பை முறித்து,

150. தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி - தன்னைச் செலுத்துகின்ற பரிக்கோலைக் கைகடந்த மதக்களிறுபோலே வெற்றியுண்டாக ஓட்டி,

தனக்குக் காவலாகிய 4பெருமையினையும் உரனையும் 5கைகடந்து 


1இதனை மொழியாமை வினாதலென்னும் துறையுளடக்குவர் ; "விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற், சரதமுடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே" (திருச்சிற். 57)

2நட்டராகம் - பகற்பண்களுள் ஒன்று.

3 "பல நறுநாற்றங்களும் தானுடைமையின் வண்டுசூழ் நிலையென்றான்" (பொருந. 96 -7, .) என்பதனுடன் இது ஒப்புநோக்கற்குரியது.

421-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

5 "குத்துக்கோல் வரைத்தன்றி யானை களிவரைத்தாயினாற்போலக் கழறுவார் சொல்வயத்தனன்றி வேட்கைவயத்தனாயினானென்பது போதரக் கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை யன்னா னென்றாள்" (திருச்சிற். 101, பேர்)