வேட்கை மீ தூர்ந்து நிற்றலால் தாறடுகளிற்றை உவமங்கூறினார். 1மதக் களிற்றிற்கு அங்ஙனம் ஓச்சிநிற்றல் இயல்பு. 151. கல்லென் சுற்றம் கடு குரல் அவித்து - கல்லென்னும் ஓசை படக் கத்தும் வேட்டைநாய்களுடைய கடிய குரல்களை அடித்துமாற்றி, 152-2. எம் சொல்லல் 2பாணி நின்றனனாக - யாங்கள் வார்த்தை சொல்லுதலையுடையதோர் காலத்தைப் பார்த்துநின்றானாக, கெடுதியுமுடையேனென்றனன் ; அதனெதிர் (142) யாங்கள் சொல்லே மாதலிற் கலங்கி (143) மெல்லியலீர், சொல்லலும்பழியோவெனச்சொல்லி (145) ஓச்சி (150) அவித்துச் (151) சொல்லற்பாணி நின்றனனாக (152) எனக் கூட்டுக. இத்துணையும் 3எளித்தல் கூறினாள். 153-4. இருவி வேய்ந்த குறு கால் குரம்பை பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப - தினையரிந்த தாளாலே வேய்ந்த குறியகால்களையுடைய குடிலிலிருக்கும் மான்பிணையையொத்த பார்வையினையுடைய மனைவி எடுத்துக் கொடுப்ப, 155-6. தேன் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின்-தேனாற்சமைத்த கட்டெளிவையுண்டு மகிழ்ச்சிமிக்குக் காவற்றொழிலை மறந்தகாலத்தே, 156 - 8. [வாய்மடுத், திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா, தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக்கு :] இரு புனம் வாய் மடுத்து நிழத்தலின் சிறுமை நோனாது நோய் மிக்க - பெரியபுனத்தை வேழந்தின்று நொக்கிவிடுகையினாலே தப்பி நின்றது விளையும் சிறுமையைப்பொறாதே வருத்தமிக்கு, 159. [உரவுச் சினம் :] உரவு சினம் அரவு உறழ் அம் சிலை கொளீஇ - பரக்கின்ற சினத்தையுடைய பாம்பையொத்த அழகினையுடைய வில்லை நாணேற்றி, உரவுச்சினம் (159) அரவுற ழஞ்சிலை கொளீஇ (158) எனப் பின்னே கூட்டுக. 4பாம்பு, வடிவிற்கும் கொலைத்தொழிலுக்குமுவமை.
1இங்கே கூறப்படும் மதக்களிற்றின் இயல்பு, "அயறசும் பிருந்த வந்த ணாற்றத்து, மதக்களி சுவைக்கு மணிநிறப் பறவைத், தொகைத் தொழி லோப்புந் தகைச்செவி" (பெருங். 1. 58:12 - 4) என்பதனாலும் அறியப்படும். 2பாணி - காலம் ; பெரும்பாண். 433 ; "தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்" (புறநா. 209:17) 3(பி-ம்.) ‘வேட்கை' 4 "அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த உரவுவில்" (கலித். 50:6 - 7) என்பதில் இங்கே கூறிய உவமை வகைகளின் பொதுத் தன்மை கூறப்படுதல் காண்க.
|