5

1 - திருமுருகாற்றுப்படை

னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
20துணையோ ராய்ந்த விணையீ ரோதிச்
செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் 
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
25மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக்

18. பொலம்புனையவிரிழை : "பொலம்புனை யவிரிழை கலங்கலம் புனன்மணி" (பரி16 : 6)

இழை - இழைக்கப்பெற்றஅணி.தேவர்களும்செயற்கையணிகளை அணிவரென்பது இங்கே உணரற்பாலது. "பணிகள் செய்வார் மயன் முதலியோர்; ‘நாவலொடு........... இழை' என்றார் பிறரும்" (சீவக. 2811, ந.)பெயரிய வென்பது பெயரடியாகப் பிறந்தவினை; இ.கொ. சூ. 68, உரை, மேற்.

21. செங்கால் வெட்சி: "செங்கால் வெட்சியு நரந்தமு நாகமும்" (மணி. 3 : 161 - 2)

23. தெய்வவுத்தி: ‘தெய்வவுத்தி யென்னும் பூண்' (கலித். 96 : 13,.)

தெய்வவுத்தியும் வலம்புரியும் கூந்தலில் அணியப்படுதல்: "தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி......... மையீ ரோதிக்கு மாண்புற வணிந்து" (சிலப். 6 : 106 - 8)

24. மு. "திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்" "(நற். 62 : 6), "தேங்கமழ் திருநுதற் றிலகந் தைஇயும்" (அகநா. 389 : 3.) தேங்கமழ் திருநுதல்: "தேமூ ரொண்ணுதல்" (குறுந். 22 : 5)

25. மகரப்பகுவாய்: "எறிமகர வலிய மணிதிகழ் நுதலியர்" (பரி. 10:77); "பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை" (.கலித்54 : 6)

26. "இலக்கணமெல்லாம் முற்றச்செய்தகுழல் என்றது திருமுருகாற்றுப்படையில், ‘துவரமுடித்த துகளறு முச்சி' என்பதற்கு முற்ற முடித்த வுச்சியெனப் பொருள்கொண்டவா றுணர்க" (தஞ்சை. 7, உரை)

28. மருதினொள்ளிணர்: "தேங்கமழ் மருதிணர்" (முருகு. 34)

26-8. "செருகல் - செருகுதல் ; ‘துவர....................மருதின்' எனத்