பத்துப்பாட்டு காலுண வாகச் சுடரொடு கொட்கும், அவிர்சடை முனிவரு மருள" (புறநா. 43 : 1 - 4) என்ற புறப்பாட்டானுணர்க. மனமும் முகமும் கையும் ஒருதொழிலைச் செய்தலின், ஏனைக்கை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது. 109 - 10. [ நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை, அங்குசங் கடாவ வொருகை:] ஒருகை அங்குசம் கடாவ ஒருகை நலம்பெறு1கலிங்கத்து குறங்கின்மிசை அசைஇயது - ஒருகை தோட்டியைச் செலுத்தாநிற்க மற்றைக்கை செம்மைநிறம்பெற்ற ஆடையையுடைத்தாகிய துடையின் மேலே கிடந்தது; இஃது யானையேறுவார்க்கு இயல்பென்று கூறினார். தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யாணை மேல்வந்து அருள்செய்தல் இயல்பாகலின், இக்கைகள் காதலினுவந்து வரங்கொடுத்த முகத்திற்கு (94) ஏற்றவாறுணர்க. 110 - 11. இருகை 2ஐ இரு வட்டமொடு எஃகு3வலம்திரிப்ப - இரண்டுகைகள் வியப்பையும் கருமையையுமுடைய பரிசையுடனே வேலையும் வலமாகச் சுழற்ற, இதனானே, 4அசுரர்வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஓட்டுதற்கு இவற்றைச் சுழற்றுதலின் வேள்வி ஓர்க்குமுகத்திற்கு (96) இக்கைகள் ஏற்றவாறுணர்க. 111 - 3. ஒருகை 5மார்பொடுவிளங்க ஒருகை6தாரொடு பொலிய - முனிவர்க்குக் தத்துவங்களைக்கூறி உரையிறந்தபொருளை உணர்த்தும் காலத்து ஒருகை மார்போடே விளங்காநிற்க, ஒருகை மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகுபெற, என்றது : இறைவன் மோனமுத்திரையத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட7ஊமைத்தசும்புள் நீர்நிறைந்தாற்போலஆனந்த மயமான ஒளி
1. புடைவை (வேறுரை) 2.ஐந்தாகிய பெருத்த பரிசை;பத்துத் திருமுகத்தினையுடைய கேடகமெனினுமமையும் (வேறுரை). 3.வெற்றிபெறச் சுழற்ற (வேறுரை) 4."அந்தண்மறை வேள்வி காவற்கார "(திருப்.); "அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலு மூள, மறங்குலவு வேலெடுத்த குமரவேல்" (திருவிளை. கடவுள்.) 5. மார்பினிடத்தே மௌனமந்திரத்தைப் பேணாநிற்க (வேறுரை) 6.தார் - மார்பிலுள்ளமாலை ; "வண்ண மார்பிற் றாருங் கொன்றை" (புறநா. கடவுள்.) 7. ஊமைத்தசும்பு - வாயில்லாதகுடம்; "குவிவா யமையாக் குட நிறை தீநீர், ............. துரியமு மிறந்த தூயோன் றூய்மை, யருளினன்" (ஞானாமிர்தம், 47)
|