169. சூர் உறு மஞ்ஞையின் நடுங்க - தெய்வமேறின மயில் போலே நடுங்காநிற்க, 169-71. [வார்கோ, லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை, யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலின் :] வார் கோல் உடு உறும் கடு விசை பகழி வாங்கி அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் - நெடிய கோலையுடைய உடுச்சேர்ந்த கடிய விசையினையுடைய அம்பை நிரம்ப வலித்துத் தலைமையினையுடைய யானையினது அழகியமுகத்தே எய்கையினாலே, 1உடு - நாணைக்கொள்ளுமிடம். 172-5. [புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப், புள்ளி வரிநுதல் சிதைய நில்லா, தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே, ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்ப :] புள்ளி வரி நுதல் சிதைய புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து நெடுவேள் அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்ப இழிதர - புள்ளியினையும் புகரினையுமுடைய மத்தகம் அழகழியும்படி அம்புபட்டு உருவின புண்களால் உமிழப்படுங் குருதி முகத்தேபரந்து 2முருகனால் வருத்தலுற்ற மகளிர்க்கு மறி யறுத்தாடுங் களத்திற் குருதி குதிக்குமாறு போலக் குதிக்கையினாலே, அயர்ந்து நில்லாது புறம் கொடுத்த பின்னர் - தன்னைமறந்து ஆண்டு நிற்றலாற்றாது முதுகிட்டுப்போன பின்பு, இதனாலும் ஏதீடு கூறினாள். 176-7. திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் - திண்ணிய நிலையினையுடைய கடம்பினது திரண்டமுதலை நெருங்கச்சூழ்ந்த மகளிரொழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலைபோலே கைகோத்தலை விடேமாய், மகளிராடுங்களத்தை கடப்பமாலைவளைத்தாற்போல மிகவும் கடப்ப மாலைவளைத்தவென்பாருமுளர். 178. நுரை உடை கலுழி பாய்தலின் - யாற்றின் நுரையையுடைய பெருக்கிலே குதிக்கையினாலே, 178-9. உரவு திரை அடும் கரை வாழையின் நடுங்க - அதனிடத்துப் பரக்கின்ற திரைமோதி இடிகரையினின்ற வாழைபோலே கால்தளர்ந்து பின்னர் ஒழுகினேமாக, அதுகண்டு, 179-81. [பெருந்தகை, யஞ்சி லோதி யசையல் யாவது, மஞ்சலோம்புநின் னணிநல நுகர்கென :] பெரு தகை அம் சில் ஓதி அசையல் நின் அணி நலம் நுகர்கு யாவதும் அஞ்சல் ஓம்பு என - பெரிய தகுதிப்பாடுடையவன், அழகிய சிலவான மயிரினையுடையாய், இங்ஙனம்
1. உடு - சிறகு ; சீவக. 2191, ந. 2. தஞ்சை. 132.
|