504

197-9. நல் பல வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த குன்று கெழு நாடன் - நன்றாகிய பலவாகிய கச்சுப்பரந்த களம்போலே அழகுபெறப் பொலிவுபெற்ற மலைபொருந்தின நாடன்,

உயர்ந்த நிலத்தேநின்று மணக்கின்ற காந்தள் வரையரமகளிராற் கீழ்நிலத்தே பரந்து அவ்விடத்தைக் கச்சுவிரித்தாற்போல அழகு பெறுத்து மென்றதனால், நம்மிலுயர்ச்சியையுடைய தலைவன் நமது நல்வினையால் தனது பெருமைதானுமொழிந்து இவ்விடத்தே வந்துகூடி நமக்கும் உயர்ச்சியுளதாக்கி நம்மை அழகு பெறுத்துகின்றானென்று உள்ளுறையுவமமெய்திற்று.

199. எம் விழைதரு பெரு விறல் - எம்மை எப்பொழுதும் விரும்புதலைத் தருகின்ற பெரியவெற்றியையுடையவன்,

200. [உள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு :]

அவ்வழி (186) உள்ளம் தன்மை உள்ளினன் கொண்டு - தான் முயங்குகையினாலே அப்பொழுது இவளுள்ளத்து நிகழுந்தன்மை மேல்வரைந்துகொண்டு இல்லறநிகழ்த்துதலாயிருக்குமென்று நினைந்தனனாய் அதனை உட்கொண்டு,

அவ்வழி : இங்கே கூட்டிற்று.

201-3. [சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி, வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப, மலரத் திறந்த வாயில் பலருண :]

பலர் உண மலர திறந்த வாயில் வளம் நகர் - பலரும்வந்து உண்ணும்படி அகலக் கதவு திறந்துகிடக்கின்ற வாசலையுடைய வளநகர்,

மிடாஅ சொன்றி வருநர்க்கு வரையா 1சாறு அயர்ந்தன்ன வளம் நகர் பொற்ப - மிடாச்சோற்றை வருவார்க்கெல்லாம் வரையாமலிடுகின்ற விழாக் கொண்டாடினாற்போன்ற செல்வத்தையுடைய அகம் பொலிவு பெறும்படி,

முன்புள்ள இயல்புகூறிற்று.

204. பைந்நிணம் ஒழுகிய நெய் மலிஅடிசில் - பசுத்த நிணமொழுகின நெய்மிக்க அடிசிலை நீ இடுகையினாலே,

205-6. வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் - குற்றமில்லாத உயர்ந்தகுலத்திற்பிறந்த உயர்ந்தோர் தமது சுற்றத்தோடே விருந்துண்டு மிக்க அடிசிலை,206. பெரு தகை - பெரிய தகைமைப்பாடுடையவன்,

207-8. நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு அறம் புணையாக தேற்றி - நீ இடுகையினாலே யான்உண்டலும் உயர்ந்ததென்று சொல்லி அப்பொழுது இல்லறம் தங்களைக்கரையேற்றுவதாகத் தெளிவித்து.


1 "அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச், சாறு" (பொருந. 1 - 2)