236 - 7. துஞ்சா முழவின் முது ஊர் வாயில் உண் துறை நிறுத்து பெயர்ந்தனன் - ஓசையை ஒருகாலும் அறாத முழவினையுடைய பழைய நம்மூர் வாசலில் பலரும் நீருண்ணுந் துறையிலே எம்மைநிறுத்தி மீண்டுபோனான் ; இதனால் வேட்கையுரைத்தல் கூறினாள். 237-9. அதன் கொண்டு அன்றை அன்ன விருப்போடு என்றும் இரவரல் மாலையன் - அப்புணர்ச்சிதொடங்கி அம்முதனாள்போன்ற விருப்பத்தோடே எந்நாளும் இரவுக்குறியிலே வருதலைத் தனக்கு இயல் பாகவுடையவன் ; ஏகாரம் : ஈற்றசை. 239-41. வரு தோறும் 1காவலர் கடுகினும் கதம் நாய் குரைப்பினும் நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும் - அங்ஙனம் வரும்போ தெல்லாம் ஊர்காவலர் கடுகிக் காத்தாராயினும் கோபத்தையுடைய நாய் குரைத்தாயினும் நீ துயிலுணர்ந்தாயாயினும் நிலவு வெளியாக எறித்ததாயினும், 242. வேய்புரை மெல் தோள் இன் துயில் பெறாஅன் (243) - மூங்கிலையொத்த மெல்லிய தோளிற்பெறும் இனிய துயிலைப் பெறாது போவன் ; 243. பெயரினும் முனியல் உறாஅன் - யாங்கள் 2குறியல்லத
1காவலர் கடுகுதல், கதநாய்குரைத்தல், தாய்துயிலாமை, நிலவு வெளிப்படல் முதலியவற்றை, "காணாவகையிற் பொழுதுநனி யிகப்பின்" நிகழும் தலைவிக்குரிய கிளவியுள் (களவு. சூ. 16) தொல்காப்பியனாரும், வரைதல் வேட்கைப் பொருளதாகிய, காப்புச்சிறை மிக்க கையறுகிளவியுள் (சூ.30) களவியலாசிரியரும், வரைவுகடாதற்பகுதியிற் காப்பிடையீட்டிற் கையறு கிளவியுள் தமிழ்நெறிவிளக்கவாசிரியரும், காப்புமிகுதிசொல்லி வரவுவிலக்குவித்தலாகிய கையறுகிளவியுள் ஒருபழையஇலக்கணநூலுரையாசிரியரும், இரவுக்குறியிடையீட்டில் தலைவன் வருந்தொழிற் கருமைக்குப் பொருந்துவனவென (சூ. 161) நாற்கவிராச நம்பியும் அடக்குவர். இத்துறைகள் ஒருங்கே வந்ததற்கு அவருட் சிலர்காட்டும் உதாரணங்களுட் கீழ்வருவன இங்கே பயன்படுவன ; யாயே துயின்மறந் தனளே யாயினும், நாயு மூரு நனிதுஞ் சலவே, காவல ரதனினுந் துயிலார் துயிலினும், ஆய்கதிர் மதியநின் றலரும், யாவ தாங்கொ லேந்திழை நிலையே" (பொருளியல்) ; "ஊர்துயிலி னாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும், பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும் - நேர்துயிலாள், அன்னை நெடுநிலா வல்லும் பகலாகும், என்னை வருவதுநீ யீங்கு" (கிளவித் தெளிவு) 2இதனைக் குறிபிழைத்தலென்றும், அல்லகுறிப்படுதலென்றும் கூறுவர்.
|