இவள் நினைத்தொறும் (251) வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய் (250) அரி பனி நாளும் ஆகத்து உறைப்ப (249) கலுழும் (251) - இவள் அங்ஙனம் கண் அழுகின்றதற்கு மேலே அவர்வருகின்ற மலை இடும்பையுடையவாயிருக்குமென்று நினைக்குந்தோறும் வலையில் அகப் பட்டமயில்போலே தன்னலம்போம்படி நுணுகிக் கண்ணில் அரித்து வீழ்கின்றநீர் நாள்தோறும் மார்பிலே துளிப்பக் கலங்காநிற்கும் ;
கங்குல் (251) - இராக்காலத்து,
அளை செறி உழுவையும் (252) - முழைஞ்சிடத்திலே செறியும் புலிகளும்,
யாளியும் (252) - யாளிகளும்,
உளியமும் (252) - கரடியும்,
புழல் கோடு ஆமான் புகல்வியும் (253) - உள்ளுப்பொய்யான கொம்பையுடைய ஆமானிலேறும்,
களிறும் (253) - யானையும்,
வலியின் 1தப்பும் வன்கண் வெ சினத்து (254) உருமும் (255) - வலியினாற்கெடுக்கும் தறுகண்மையையுடைத்தாகிய வெவ்விய சினத்தை யுடைய உருமேறும்,
சூரும் (255) - கொடுந்தெய்வமும்,
இரை தேர் அரவமும் (255) - இரை தேடித்திரியும் பாம்பும்,
ஒடுங்கு இரு குட்டத்து அரு சுழி வழங்கும் (256) கொடு தாள் முதலையும் இடங்கரும் கராமும் (257) - புடைபட்ட கரிய ஆழத்திடத்துப் போதற்கரிய சுழியிடத்தே திரியும் வளைந்த தாளையுடைய முதலையும் இடங்கரும் கராமும்,
இவைமூன்றும் சாதிவிசேடம்.
நூழிலும் (248) - வழிபறிப்பார் கொன்று குவிக்குமிடங்களும்,
2நூழில் கொடிப்பிணக்கென்பாருமுளர்.
இழுக்கும் (258) - வழுக்குநிலமும்,
ஊழ் அடி முட்டமும் (258) - முறையடிப்பாடாய்ப் பின்பு வழி முட்டாயிருக்கும் இடங்களும்,
3பழுவும் (259) - பிசாசும்,
பாந்தளும் (259) - பெரும்பாம்பும்,
உளப்பட பிறவும் (259) வழுவின் வழாஅ விழுமம் (260) - உழுவை முதலாக எண்ணப்பட்ட இவையெல்லாமுட்பட வேறும் தப்புஞ் செயலிற் றப்பாத இடும்பைதருவனவற்றை,