513
ஒன்பதாவது
1 ப ட் டி ன ப் பா லை
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி

 


1 இது வஞ்சி நெடும்பாட்டெனவும்வழங்கும் ; "பட்டினப் பாலை யென்னும்வஞ்சி நெடும்பாட்டு ஆசிரியவடி விரவிவந்தஏந்திசைத் தூங்கல் விரவியற்குறளடி வஞ்சிப்பா " (யா.வி. செய். சூ. 37); " பட்டினப் பாலையென்னும் வஞ்சிநெடும் பாட்டினுள் ஆசிரியவடி பயின்றுவந்தன ; கலியடியும் வெள்ளடியும்அருகினவெனக் கொள்க " (யா.கா. ஒழிபு. 4; இ - வி. சூ. 745, உரை) ; " பாடியதோர் வஞ்சிநெடும்பாட்டாற் பதினாறு, கோடிபொன் கொண்டதுநின்கொற்றமே"

(தமிழ்விடு. கண்ணி, 193)

1. மூவசைச் சீருக்கும்(தொல். செய். சூ. 12, ந.), வஞ்சியுறுப்பாகிய செய்யுளுக்கும் (தொல். செய்.சூ.105,ந.) இவ்வடி மேற்கோள்.

1 - 2. மதுரைக். 108, ந. குறிப்புரை.புறநா. 386 : 22, குறிப்புரை.

இவ்வடிகள் தூங்கல்வண்ணத்திற்கும் (தொல். செய்.சூ. 220, இளம்.), மூவசைச் சீருக்கும்(தொல். செய். சூ. 12, பேர்.) , வஞ்சியுறுப்பாகி வந்த செய்யுட்கும் (தொல். செய். சூ. 105, பேர்.) மேற்கோள்.

4. தொல். புள்ளி. சூ. 105, ந. மேற்.

3 - 4. " துளிநசை வேட்கையான்மிசைபாடும் புள் " (கலித். 46 : 20) ; "துளிநசைப்புள் " (புறநா. 198 : 25) ; "வானம்பாடி மேகத்துப் பிறந்த துளியையே நச்சிப்பாடுமாறு போல" (சீவக.2897, ந.) ; தக்க. 606.

1 - 4. " அவையாமாறு : 'வசையில்..............உணவின்'எனத்தன்சீர் வரத் தூங்கலோசை பிறந்தது ;.......... 'புட்......... மாறி' என்பதும்வெண்பாவுரிச்சீராற் றூங்கலோசை பிறந்தது; புட் ............... மாறி ' என்புழி, ' வசையில் ..........மீன் ' எனத்தனது சீரானே தூங்கலோசை பிறந்தாங்குப் பிறந்தது ; ‘திசை...........ஏகினும்' என இயற்சீர்நிற்பத்தன்சீரானே தூங்கலோசை பிறந்தது " (தொல். செய். சூ. 22, பேர்.) ; " ‘வசையில்.........மீன் ' எனத் தன்முன்னர்த்தான் வந்தும், ‘திசை..........