515
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்ச
ளினமாவி னிணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
20யகனகர் வியன்முற்றத்துச்
சுடர்நுதன் மடநோக்கி
னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
25முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்

16. கோட்டெங்கு : பெருங். 2. 9 :9.

கோள், கொத்தினை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தஞ்சை. 85, உரை.

22. " வஞ்சியுள், நேரிழை...........கவருமென்ற ஆசிரியவடியினை நாலசைச்சீர் காட்ட வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவற்றிற்குத் தூங்கலோசை யின்றாகலானும் சீர்தம்முட்புணர்ந்திறுதலின்மை யானும் வஞ்சிச்சீர் அறுபது காட்டுகின்ற வழி யாண்டும் நேர்பசை நிரைபசைகள் அலகு பெறாமையானும் தொல்காப்பியனார் கொள்ளார் " (தொல். செய். சூ. 12, ந.) ; " பட்டினப் பாலையென்னும்வஞ்சி நெடும் பாட்டினுள், ‘நேரிழை.............கவரும்' என்றித் தொடக்கத்தன ஆசிரியவடி" (யா - வி. அடியோத்து, சூ. 9) ; நேரிழை மகளிர் : யா - வி. செய். சூ. 5, மேற்.

23. " கோழி விட்டெறி குழையினை " (ஆனைக்காப். திருநாட்டுப். 122)

" குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையவரென்றவழி, கோழி யெறிவாரென்றுணரற்பாலதன்று ; ஒன்றானும் முட்டில் செல்வத்தாரென்றவாறு " (தன். சூ, 407, மயிலை.)

22 - 3. வஞ்சிப்பாவில் ஆசிரியவடியும் வெண்பாவடியும் விரவி வந்ததற்கு முறையே இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 111, இளம் ;தொல். செய். சூ. 71,பேர். ந. ; யா. கா. ஒழிபு. 4, உரை ; இ - வி. 745, உரை.

24 - 5.பெரும்பாண். 248 - 9, குறிப்புரை ; "பூங்கட் புதல்வர் நடைத்தேர் " (பு. வெ. 43.)

22 - 6. " பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதக, நற்சிறா ரூர்தலி னங்கை மார்விரீஇ, உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை, மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே " (சீவக. 89)"