| கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி | 30 | நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங் கழிசூழ்படப்பைக் கலியாணர்ப் பொழிற்புறவிற் பூந்தண்டலை மழைநீங்கிய மாவிசும்பின் | 35 | மதிசேர்ந்த மகவெண்மீ னுருகெழுதிற லுயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை யிருகாமத் திணையேரிப் | 40 | புலிப்பொறிப் போர்க்கதவிற் றிருத்துஞ்சுந் திண்காப்பிற் புகழ்நிலைஇய மொழிவளர வறநிலைஇய வகனட்டிற் சோறுவாக்கிய கொழுங்கஞ்சி | 45 | யாறுபோலப் பரந்தொழுகி |
28. " குறும்ப லூரயாஞ் செல்லு மாறே " (நற். 9 : 12) 29. " வெண்க லுப்பின் கொள்ளை சாற்றி " (நற். 4 : 8 ; அகநா. 140 : 3) ; " தெண்கழி விளைந்த வெண்க லுப்பின், கொள்ளை சாற்றிய " (அகநா. 159 : 1 - 2) 29 - 30. உப்பிற்கு விலையாக நெல்லைக் கொள்ளுதல் : " உப்பை மாறி வெண்ணெற் றரீஇய " (குறுந். 269 : 5) ; " நெல்லி னேரே வெண்க லுப்பென " (அகநா. 140 : 7) 39. " இருகாமத்திணையேரி போலும் குளங்களிலும் .............விளையாடி " (தொல்.கற்பு. சூ. 50, ந.) "இக்குண்டமிரண்டிற்கும் இவ்வுலகத் தின்புறலும், போக பூமியிற் பிறத்தலும் நிரனிறை யாக்கலுமொன்று ; அவற்றை, ‘ இருகாமத்திணையேரி' என்றார் பட்டினப்பாலையிலும் " (சிலப். 9 : 54 - 64, அடியார்.) 40. புலிப்பொறி : பட்டினப் 135. போர்கதவு : மதுரைக். 354, ந. கு - ரை ; சிலப். 10 :7, அரும்பத. அடியார். 41. " திருநிலைஇய பெருமன்னெயில் " (பட்டினப். 291)
|