70 | கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர் கல்லெறியுங் கவண்வெரீ இப் புள்ளிரியும் புகர்ப்போந்தைப் | 75 | பறழ்ப்பன்றிப் பல்கோழி யுறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் கிடுகுநிரைத் தெஃகூன்றி நடுகல்லி னரண்போல | 80 | நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய குறுங்கூரைக் குடிநாப்ப ணிலவடைந்த விருள்போல வலையுணங்கு மணன்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த | 85 | வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் சினைச் சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் |
78. பெரும்பாண். 119 - 20, குறிப்புரை. 78 - 9. " பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல், வேலூன்று பலகை " (அகநா. 67 : 9 - 11, 131 : 10 - 12) 82 - 3. நிலவு மணலுக்கு : பொருந. 213, குறிப்புரை. 85. வெண்கூதாளம் : முருகு. 192. கூதாளியென்பது அம்முப்பெற்று இகரங்கெட்டும், பின் அத்துப்பெற்று மகரங்கெட்டும் வருதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல் ; உயிர். சூ. 44, ந. 86 - 7, " சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல் " (பெரிய. திருக்குறிப்பு. 7) ; " விருப்பின் மீன்கவர் வினைஞர் கோட்சுறா, மருப்பினாடலும் வருதன் மாண்புணர்ந், தொருப்பட் டீர்ம்புன் லும்பற் போற்றித்தங், கருத்து வாய்ப்பது கருங்க டற்பறம் " (தணிகைப். திருநாட்டுப். 136) ; " புறவுக் கோட்டஞ் செயும்வனப்பிற பூவை மொழியார் விழிதான்வாழ், இறவுக் கோட்டுக் கடல்பணிக்கு மெழிலா லவர்நாட்டினரிறைஞ்சும், சுறவுக் கோட்டுட் கடலரசன் றோன்றி வரங்க ளினி
|