519
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
90புன்றலை யிரும்பரதவர்
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
துவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானன்
95மாமலை யணைந்த கொண்மூப் போலவுந்
தாய்முலை தழுவிய குழவி போலவுந்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு
மலியோதத் தொலிகூடற்
றீதுநீங்கக் கடலாடியு
100மாசுபோகப் புனல்படிந்து
மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
மகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
105பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத்
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகிலுடுத்து
மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகளிர் சூடவு

தருளும், நறவுக் கோட்டு மலர்ப்புன்னை ஞாழற் பொதும்ப ரெவ்விடனும் " (ஆனைக்காப். நாட்டு. 96)

" இனி , நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார் ; அவை, ' சினைச்............வல்லணங்கினான்' எனவும் வரும் " (தொல். அகத்திணை . கு. 5. ந.)

92. பாயிரும் பனிக்கடல் : பரி. 5 : 1.கடல் வேட்டம் : எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ, எமரும் வேட்டம் புக்கனர் " (நற். 67 : 8 -9) ; " பெரும்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் " (அகநா. 140 : 1)

95 - 6. " தாய்முலை தழுவிய குழவி போலவு, மாமலை தழுவிய மஞ்சு போலவும் " (சீவக. 100)

101. அலவனாட்டுதல் : குறுந் . 303 : 5 - 7, 316 : 5 - 6.

103 - 5. பெரும்பாண். 387 - 9.