பத்துப்பாட்டு அசைந்தது (109) அப்படியே பன்னிருகையும் முகத்தின் பகுதியிலே படும்படி தொழில் செய்தென இச்சொன் முடிபுக்கேற்பக் கைகளையும் முகங்களையும்1மாட்டாக முடிக்க. திரிப்பவென்பது முதலிய நிகழ்காலச் செயவெனெச்சங்கள் ஏந்தியது சேர்த்தியதென முற்றுவினைகொண்டு முடிந்தன. 119. அந்தரம் பல்லியம் கறங்க - ஆகாயத்தினது துந்துபி ஒலிப்ப, 119 - 20. திண் 2காழ் வயிர் எழுந்து இசைப்ப - திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக்கொலிப்ப, வால் வளை ஞரல - வெள்ளிய சங்கு முழங்க, 121. உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு - வலியைத் தன்னிடத்தே கொண்ட உருமேற்றினது இடிப்புப்போலும் ஓசையையுடைய முரசுடனே. 122. பல்பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ - பல பீலியையுடைய மயில் அவனாணையினாலே3வென்றெடுத்த கொடியிலேயிருந்து ஒலியா நிற்க, பொறி : ஆகுபெயர். 123. விசும்பு ஆறாக - ஆகாயமே வழியாக, விரை செலல் முன்னி - விரைந்த செலவினை மேற்கொண்டு,
124. [ உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்:] ஓங்கு உலகம் புகழ்ந்த உயர்4விழுச்சீர் - நன்மையோங்கும் நன்மக்கள் புகழ்ந்த உயரும் சீரினையுடைய புகழினையுடைய,
125.அலைவாய் 5சேறலும் நிலைஇய பண்பு - நாமனூரலைவாயென்னும் திருப்பதியேற எழுந்தருளுதலும் அவற்கு நிலைபெற்ற குணம்; குன்றமர்ந்துறைதலுமுரியன்; அதாஅன்று (77) வேழமேல் கொண்டு (82) இயற்றிக் (118) கறங்க (119) இசைப்ப ஞரல (120) அகவ (122) முன்னி (123) அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பென முடிக்க. அதாஅன்று - அதுவன்றி, திருவாவினன்குடி 126. சீரை தைஇயவென்பதுமுதல் முனிவர் முற்புக (137) என்னுந்துணையும் ஒரு தொடர்.
1. மாட்டு : 43 - 4-ஆம் அடிகளின் விசேடவுரையைப் பார்க்க. 2. கரிய கொம்பு (வேறுரை) 3. "செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி" (முருகு. 67) 4. விழுமிய அழகு (வேறுரை) 5. சேறல் - செறிதல் (வேறுரை)
|