520
110மகளிர் கோதை மைந்தர் மலையவு
நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுத்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும்
பாட லோர்த்து நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
115கண்ணடைஇய கடைக்கங்குலான்
மாஅகாவிரி மணங்கூட்டுந்
தூஉவெக்கர்த் துயின்மடிந்து
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியன்றெருவி
120னல்லிறைவன் பொருள்காக்குந்
தொல்லிசைத் தொழின்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
றேர்பூண்ட மாஅபோல
வைகறொறு மசைவின்றி
125யுல்குசெயக் குறைபடாது
வான்முகந்தநீர் மலைப்பொழியவு
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவு
130நிலத்தினின்று நீர்ப்பரப்பவு

109 -10. மதுரைக். 264 - 6, ந. குறிப்புரை. பரி. 6 : 16, உரை ; கலித். 66 : 15 - 6; சீவக. 2119.

112. " பரதவர், திண்டிமில் விளக்க மெண்ணும் " (நற். 372 : 11 - 2)

113. " நாடகங் கண்டு பாடற் பான்மையிற், கேள்வி யின்னிசை கேட்டு " (மணி. 25 : 82 - 3) ; ஆடல் கண்டும் பாடல் கேட்டும் " (பெருங். 3. 23 : 6) ; " பொன்னார் கூத்து மன்னார், நாவல ரமுதமன்ன பாடலு நாக நாட்டுக் , காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலிலாழ்ந்தான் " (திருவிளை .1 :3) ; " அன்புறு கீதங் கேட்டு நாடகங் கண்டமர்ந்தும் " (வாயு. காலவியல்பு. 4)

114. நெடுநல் . 95, குறிப்புரைகு,

119. வேலாழி : " வேலாழி சூழுலகில் " (திணைமாலை. 62)

125. " உல்குடைப் பெருவழி" (பெரும்பாண். 81)

129. (பி - ம்.) ' ஏறவும் '