521
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருகடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
135புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
140கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை
யேழகத் தகரோ டுகளு முன்றிற்
குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
145மழைதோயு முயர்மாடத்துச்
சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குற்
றூசுடைத் துகிர்மேனி
மயிலியன் மானோக்கிற்
150கிளிமழலை மென்சாயலோர்
வளிநுழையும் வாய்பொருந்தி
யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

139.(பி - ம்.) ‘ வரைபாய் வருடை'

144. புழைவாயில் : " வாயிலொடு புழையமைத்து" (பட்டினப், 287)

இடைகழி : சீவக. 399.

146. செறிகுறங்கு : " சேர்ந்துடன் செறிந்த குறங்கின் " (சிறுபாண். 20)

150. கிளிமழலை : " வாய்திறந்து, கிளிபுரை கிளவியாம் பெறுக " (பொருளியல்) " மாதர்ப் பைங்கிளி மழலை" (பெருங். 2. 12 : 138.)

153 - 4.முல்லை95 ; " சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன, நலம்பெறு கையின் " (ஐங். 293 : 1 - 2) ; " கொடிச்சியர் கூப்பி வரை தொழு கைபோ, லெடுத்த நறவின் குலையலங் காந்தள் " , "அடுக்கநா