522
155வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய
160மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்
வருபுன றந்த வெண்மணற் கான்யாற்
றுருகெழு கரும்பி னொண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
165வாலரிசிப் பலிசிதறிப்
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
170தொல்லாணை நல்லாசிரிய
ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்

றலர்காந்த ணுண்ணேர்தண் ணேருருவிற், றுடுப்பெனப் புரையுநின்றிரண்டநே ரரிமுன்கை " (கலித். 40 : 11 - 2, 59 : 3 - 4. )

156 -7. குழல், யாழ், முழவு : " குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித் , தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே " (சிலப். 3 : 139 - 41)

158. மதுரைக். 328, குறிப்புரை.

158 - 60.மதுரைக். 365 - 6.

167. " பவழத் திண்காழ் கம்பலக் கிடுகி னூன்றி ", " பவழக்காறிகழும் பைம்பொற் பெருங்கிடுகு " (சீவக. 113, 2975) ; "காழுங்கிடுகிம்போ னிற்கும் " (அறநெறி. 84)

167 - 8. அங்காடியில் இருக்கும் கொடிகள் : (மதுரைக். 365 - 73, கு - ரை.) " கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்து " (பதிற். 15 : 19 .)

169. " பரந்த கேள்வித் துறைபோய பைந்தார் மார்பன் " (சீவக. 717)

170. மதுரைக். 761.

169 - 70. மதுரைக். 760 - 61.

169 - 71. கல்வியில் வல்லோர் கொடியெடுத்தல், மதுரைக்காஞ்சி, 372-ஆம் அடியின் விசேடவுரையாலும், " கூழைத்தண் டமிழுக்கேன்