523
மரியவும் பெரியவு நெரிய வீண்ட
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
195மேமாப்ப வினிதுதுஞ்சிக்
கிளைகலித்துப் பகைபேணாது
வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
விலைஞர் குரம்பை மாவீண்டவுங்
கொலைகடிந்துங் களவுநீக்கியு
200மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு
நல்லானொடு பகடோம்பியு
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
205கொடுமேழி நசையுழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
210கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்துவீசுந்

192. (பி - ம்.) ' நெளிய வீண்டி '

185 - 92. இவ்வடிகள், அரும்பொருளிவை யென்பதற்கு மேற்கோள் ; சிலப். 2 : 5 , அடியார்.

200. மு. புறநா. 99 : 1 ; ஞானா . 17.

202. " துளங்கெரியவர் புகழ்துளக்கினை " (யா.வி. சூ. 86, மேற்.)

206 - 7. "பால்கொள லின்றிப் பகல்போன் முறைகோடாக் கோல்செம்மை " (கலித். 86 : 17 - 8) ; " ஒத்துச் சகத்தனாய் நின்றொழகுஞ் சால்பு தவமே, நுகத்துப் பகலாணி போன்று " (பழ. 95) ; " பகலன்ன வாய்மொழி - நுகத்திற் பகலாணி போன்ற நடுநிலைச்சொல் " (பு. வெ. 157) ; " நுகத்திற் பகலனையாய் " (,தஞ்சை. 48)

210. (பி - ம்.) ' குறைபடாது'

206 - 10. இவை வணிகர் குலுத்திற் குன்றாமைக்கு மேற்கோள் ; சிலப். 2 : 8 , அடியார்.

210 - 11. " வாணிகர்க்கு உரிய விரதமாவன, கொள்வதூஉம் மிகை கொள்ளாது கொடுப்பதூஉங்குறை கொடாது பல்பண்டம் பகர்ந்