525
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
215சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
220வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் , பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
225நுண்ணிதி னுணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
துருகெழு தாய மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்

தீதல் முதலியன " (தொல். அகத்திணை. சூ. 28, ந.) ; " கொடுப்பது குறையின்றிக் கொள்வது மிகையின்றி............... வணிகர்கண் மற்றறி யார் " (விநாயக. நகர. 88)

209 - 12. " பிறவுந் தமபோற் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்பநாடிச் செய்தல் " (குறள், 120, பரிமேல்.)

206 - 13. பெருங். 5. 1 : 6.

214. முதுவாய் : பட். 253 ; முருகு. 284 ; சிறுபாண். 40 ; பதிற். 66 :3.

218. இவ்வடி வல்லிசை வண்ணத்திற்கு மேற்கோள் ;தொல். செய். சூ. 217, பேர்.

220. " வாரே னெஞ்சம் வாய்க்கநின் வினையே " (அகநா. 131 : 15)

218 - 20. " இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம், ஒருங்குடனியைவ தாயினும் ............கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய, வாள்வினை மருங்கிற் பிரியார் " (குறுந். 267 : 1 - 6)

223 - 4. " மாப்பயம்பின் பொறைபோற்றாது, நீடுகுழி யகப்பட்ட, பீடுடைய வெறுழ்முன்பிற், கோடுமுற்றிய கொள்களிறு, நிலைகலங்கக் குழிகொன்று, கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு " (புறநா. 17 : 14 - 9)