| கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின் | 230 | முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடை யடிய வோங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு் | 235 | வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச மாக்க ணகலறை யதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி | 240 | வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் |
229 - 30. " கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர், முடியிடறித் தேய்ந்த நகமும்...........பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே, கல்லார் தோட் கிள்ளி களிறு " (முத்.) 229 - 31. கதவுகொன் மருப்பின்...............யானை : " கடிமதிர் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச், சிறுகண் யானை ", " பெருங்கதவு பொருத யானை மருப்பின் " (அகநா. 24 : 11 - 3, 26 : 6) ; " எயிறுபடையாக வெயிற்கத விடாஅ............, பெருங்கை யானை ", " களிறு, கதவெறியாச் சிவந்துராஅய், நுதிமழுங்கிய வெண்கோட்டான், உயிருண்ணுங் கூற்றுப் போன்றன", " களிறே, எழுஉத்தாங்கிய கதவுமலைத்தவர், குழுஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற், பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே " (புறநா. 3 : 9 - 11 , 4 : 10 - 12, 97 : 8 - 10) ; " அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்னர், எயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டால்,...........தோன்றுமே, காய்சினவேற் கிள்ளி களிறு " (முத்.) " களிறுங் கதவிறப் பாய்ந்த" (பு. வெ. 107) 230 - 31. சிறுபாண். 199 - 200. 236. முரசிற்குப் பேய்க்கண் உவமை : " பறைக்கட் பேய்மகள் " (சிலப். 26 : 208) ; " பறையன்ன விழித்தகண்ணாள் " (தகடூர்.) ; " பறைபோல் விழிகட் பேய் ", " பறைக்கட் செறுபல் கணப்பேய்" (திருஞா. தே.) ; " பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய்" (திருநா. தே.) ; " பறைக்கணெடும் பேய்க்கணம் " (சுந்தர. தே.) ; " பறைபோல் விழி கட்பேய்" (காரைக். கோயின்மூத்த.1)
|