| கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவியு மயங்கி நீரற் | 245 | றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி யந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற் | 250 | பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும் | 255 | பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங் கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் | 260 | பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி |
242. " கராஅங் கலித்த குண்டுகண் ணகழி" (புறநா. 37 : 7) 245. முல்லை. 99, குறிப்புரை. 246 - 7. மாலையில் மகளிர் விளக்கேற்றுதல் : மதுரைக். 555-6- ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. 252. மலர் தூவுதல் : முல்லை. 8 - 10, குறிப்புரை. 253. முதுவாய்க்கோடியார் முழவு : குறுந். 78 : 2. 256. (பி - ம்.) 'நெரிஞ்சியோடு ' (மணி. 12 : 60) 258. " கூகையோ டாண்டலை பாட " (காரைக். திருவாலங்காட்டு மூத்த. 3) 260. பிணந்தின் யாக்கைப் பேய்மகள் : " பேய்மகள்...........நிணந்தின் வாயள் " (முருகு. 51 - 6) ; பேய்மகள், நிணனுண்டு சிரித்த தோற்றம் " (சிறுபாண். 197 - 8) 259 - 60. " பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியிற், கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட " (சிலப். 26 : 209 - 10)
|