528
லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
265தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக்
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
270பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற
மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
275தொல்லருவாளர் தொழில்கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
மாத்தானை மறமொய்ம்பிற்
280செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப்
புன்பொதுவர் வழிபொன்ற
விருங்கோவேண் மருங்குசாயக்
காடுகொன்று நாடாக்கிக்

265. தொடுதோலடியார் : (பெரும்பாண், 169 ; மதுரைக். 636)

268. " பகலுங் கூவுங் கூகையொடு ", " கூகையொடு கூடிப், பகலுங் கூவு மகலு ளாங்கண் " (புறநா. 356. 2, 362 : 17 -8 ; " பேணா ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும் " (பு. வெ. 39)

270. மதுரைக். 176.

269 - 70. மதுரைக். 186 - 7, குறிப்புரை.

271. " ஆலுங் கடறூர்த்தன் மலையகழ்த லிவைவல்லார் " (சீவக. 2165)

271 - 3. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புரைத்தற்கு இவை மேற்கோள் (தொல். புறத்திணை .சூ.12, .)

278. மதனுடை நோன்றாள் : முருகு. 4.

283. " சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள் " (திருவிளை. 3 : 26) ; " காடுகொன் றிருநகர்ப்படுப்ப " (காஞ்சிப். நகரேற்று. 185)