529
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
285பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇப்
பொருவேமெனப் பெயர்கொடுத்
290தொருவேமெனப் புறக்கொடாது
திருநிலைஇய பெருமன்னெயின்
மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
295பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ்
செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ
ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்

284. " நிலனெரி மருங்கி னீர்நிலை பெருகத், தட்டோ ரம்ம விவட்டட் டோரே " (புறநா. 18 : 28 - 9) ; " குளந்தொட்டு............வளந்தொட்டு " (சிறுபஞ்ச. 66)

283 - 4. " காடுகொன்று நாடக்கிக் குளந்தொட்டு ' என்றாற் போல உழுவாரென்றது உழுவிப்பார் மேலும் செல்லும்" (குறள், 1032, பரிமேல்.)

285. (பி - ம்.) ' பிறங்குநிலைவாயில் '

" பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே " (புறநா. 69 :12)

" உறையூரென்பதனைப் பிறங்கு நிலைமாடத் துறந்தை போக்கியெனவும் மேலையார் திரித்த வகையானே இக்காலத்தும் திரித்துக் கொள்ளப் படுவனவுள " (தொல். செய். சூ. 80, பேர். ந.)

287. பட்டினப். 144.

291. பட்டினப். 41.

294. பரேரெறுழ் : (பெரும்பாண். 60 ; நெடுநல், 31)

296 - 7. மகளிர் திளைக்கும் மார்பு :சிறுபாண். 232, குறிப்புரை.

298. வீரருக்குச் சிங்கம் உவமை : பெரும்பாண். 449 ; " ஆளிய மொய்ம்பன் " (சீவக. 517) ; " அரிமா னன்ன, வெஞ்சின விடலை " (பெருங். 3. 6 : 30 - 31) ; " சீயமும்...........போல்வார் " (பு. வெ. 25) உவமை உயர்ந்த பொருளாகல் வேண்டுமென்பதற்கும் வலி காரணமாக உவமம் பிறக்குமென்பதற்கும் இவ்வடி மேற்கோள் ; தொல். உவம. சூ. 3, 4. இளம். பேர் ; இ - வி. சூ. 639.