53

1 - திருமுருகாற்றுப்படை

சீரை 1தைஇய உடுக்கையர் - மரவுரியை உடையாகச் செய்த உடையினையுடையர்,

இதற்குக் 2கற்றோய்த்தல் முதலியன செய்த உடுக்கையரென்பாருமுளர்.

126 - 7. சீரொடு வலம்புரி புரையும் வால்3நரை முடியினர் - அழகோடு வடிவாலும் நிறத்தாலும் வலம்புரிச்சங்கினை யொக்கும் வெள்ளிய நரைமுடி யினையுடையர்,

128. மாசுஅற இமைக்கும் உருவினர் - 4எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையர்,

128 - 30. மானின் உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் - கிருட்டினாசினம் போர்த்த விரதங்களால் விட்ட பட்டினியால் தசைகெடுகின்ற மார்பினெலும்புகள் கோவை தோன்றி உலவும் உடம்பினையுடையர்,

தைஇய மார்பென்க.

130 - 31. நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் - எப்பொருளும் நுகர்தற்கு நன்றாகிய பகற்பொழுதுகள் பலவும் சேரக்கழிந்த உணவினையுடையர்,

இது மாதோபவாசங் கூறிற்று.

131 - 2. இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்-மாறுபாட்டோடே நெடுங்கால நிற்கும் செற்றத்தினையும் போக்கிய மனத்தினை யுடையர்,

பகைமை நெடுங்காலம் நிகழ்வது செற்றம்.

132-3. [யாவதுங், கற்றோ ரறியா வறிவினர்]5கற்றோர் யாவதும் அறியா அறிவினர் - பலவற்றையும் கற்றோர் சிறிதும்அறியப் படாத இயல்பான அறிவினையுடையர்,

133 - 4. கற்றோர்க்கு தாம் வரம்பு ஆகிய தலைமையர் - பலவற்றையும் கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையையுடையர்,

என்றது கல்வியைக் கரைகண்டா ரென்றவாறு.

134 - 5. காமமொடு கடு சினம் கடிந்த 6காட்சியர் - ஆசையோடே கடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையர்,


1. தைத்த (வேறுரை)

2. கற்றோய்த்தல் - காவிக்கல்லைக் கரைத்த நீரில் தோய்த்தல்.

3. நரைக்கொண்டையினை யுடையார் (வேறுரை)

4. "நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடீஇ" (பு. வெ. 168)

5. யாவதும் கற்றோர் - எவ்வகைப்பட்ட பொருளினையும் கற்று வல்லுநர் (வேறுரை)

6. தோற்றத்தினை யுடையார் (வேறுரை)