530
றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
300வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் றோளே.

299. திருமாவளவன் : பொருந. இறுதி வெண்பா, 2, குறிப்புரை.

298 - 9. கரிகால்வளவனுக்குச் சிங்கம் உவமை : பொருந. 139 - 40.

300. " காடரில் வேந்தர் செலச்செற்ற மன்னன்கை வேலின் வெய்ய, வேடரில் வெஞ்சுரம் ", " அங்கண் மலர்த்தா ரரிகே சரிதென்னர் கோனயில்போல், வெங்க ணெடுஞ்சுரம் " (பாண்டிக்கோவை)

300 - 301. " தென்னன் பறந்தலைக் கோடிவென்ற, வேல்புரை வெம்மைய கான மெனினுமவ் வேந்தன்செய்ய, கோல்புரை தண்மைய வாநும்மொ டேகினெங் கொம்பினுக்கே " (பாண்டிக்.) ; "மன்னெடு வேலினாய் மாழை மடநோக்கி, நின்னொடு செல்ல நெடுங்கானம் - கொன்னுனைய, வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங், கோலென்னலாகுங் குளிர்ந்து " (கிளவிமாலை)

சினைமுதற் பொருள்கள் உறழ்பொருளில் மயங்கி வந்ததற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். கிளவி. சூ. 16, சே. ; இ - வி. சூ. 309, உரை.

218 - 301. "முட்டாச் சிறப்பிற்............நெஞ்சேயென நின்றது, பின்னர் வேலினும் வெய்ய............தோளே யெனச் சேய்த்தாகச்சென்று பொருள் கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருள் முடிய உரைப்பதாம்" (தொல். செய். சூ. 211, பேர்.) ; "முட்டாச் சிறப்பின்.............தோளே : அகன்றுகிடந்து மாட்டின்றி வந்தது " (தொல். செய். சூ 211, ந.)


இதன் பொருள்

இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையாகலின், இதற்குப் பட்டினப்பாலையென்று பெயர் கூறினார்.

பாலையாவது பிரிதலும் பிரிதனிமித்தமும் கூறுவது.

இப்பாட்டு, வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறியது ; (தொல். கற்பு. சூ. 5). இது, 1 முதலும் கருவுங் கூறாது உரிப்பொருளே சிறப்பக் கூறியது.


1 "முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே, நுவலுங் காலை முறை சிறந் தனவே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை" (தொல். அகத். சூ .3) என்பதும், ' முதலிற் கருவும் கருவிலுரிப் பொருளும் சிறந்துவரும் ' என்னும் அதனுரையும் இங்கே அறியற்பாலன.