531

1. வசை இல் புகழ் - குற்றங் கூறுதலில்லாத புகழையுடைய காவிரி (6) என்க.

1 - 2. வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் - விளங்குகின்ற 1 வெள்ளியாகியமீன் தான் நிற்றற்குரிய வடதிசையினில்லாமல் தென்றிசைக்கண்ணே போகினும்,

இதனாற் பெய்யும்பருவத்துப் பெய்யாமைக்குக் காரணங்கூறினார்.

3 - 5. [ தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினும் :] தளி உணவின் தன் பாடிய புள் தேம்ப புயல் மாறி வான் பொய்ப்பினும் - துளி உணவாகையினாலே தன்னைப்பாடிய வானம்பாடி புலரும்படி மழையைப் பெய்தலைத்தவிர்ந்து மேகம் பொய்த்துவற்கடகாலமாயினும்,

5 - 6. தான் பொய்யா மலை தலைய கடல் காவிரி - தான் பொய்யாமாற் காலந்தோறும் வருகின்ற 2 குடகமலையிடத்தே தலையினையுடைய கடலிடத்தே செல்கின்ற காவிரி.

கடல் - 3 கணவன்,

7. புனல் பரந்து 4 பொன் கொழிக்கும் - நீர்பரந்து கரையிலே பொன்னைப்போகடும் சோழநாடு (28),

8. விளைவு அறா வியல் கழனி - விளைதற்றொழில் மாறாத அகற்சியையுடைய கழனியிடத்தில்,

9 - 12. கார் கரும்பின் கமழ் ஆலை தீ தெறுவின் கவின் வாடி 5 நீர் செறுவின் நீள் நெய்தல் பூ சாம்பும் புலத்து ஆங்கண் - பசிய கரும்பின் கமழும் பாகை அடுகின்ற கொட்டிலில் நெருப்பிற்புகை சுடுகையினாலே அழகுகெட்டு நீரையுடைத்தாகிய செய்யின்கணின்ற நீண்ட நெய்தற்பூ வாடும் நிலத்தையுடைய வயலிடத்துக் குறும்பல்லூர் (28),

13 - 5. 6 காய் செந்நெல் கதிர் அருந்து 7 மோடு எருமை முழு


1 " வறி துவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி " (பதிற். 24 : 24)

2 " கொண்டல்குமு றுங்குட கிழிந்துமத குந்தியகில் கொண்டு நுரைமண்டிவருநீர் " (திருவரங்கக். 6)

3 கடலை நதிகளின் கணவனென்று கூறுதல் கவிமரபு ; " பொருநையாங் கன்னி முந்நீர்த், தன்மகிழ் கிழவ னாகந் தழீஇக்கொடு கலந்த தன்றே " (திருவிளை. நாட்டுச்சிறப்பு, 10)

4 "பொன்னி பொன்கொழிக்கும், அலையார் திருவரங் கத்தெம் பிரான் " (திருவரங்கக். 16)

5 " நீரார் செறுவி னெய்தல் " (கலித். 75 :1)

6 எருமை முதலியன நெல்லையருந்துதல் : " செழுஞ்செந் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா தின்ற லஞ்சி" (அகநா. 156 : 3 - 4)

7 மோடு என்பதற்கு இங்கு எழுதியவாறே " பிணர்மோட்டுரு