532

குழவி கூடு நிழல் துயில் வதியும் - காய்த்த செந்நெற்கதிரைத்தின்ற வயிற்றையுடைய 1 எருமையீன்ற முற்பட்ட கன்றுகள் 2 நெடுங்கூட்டினுடைய நிழலிலே உறக்கத்தைக் கொள்ளுங் குறும்பல்லூர் (28),

16. கோள் தெங்கின் - குலைகளையுடைய தெங்கினையும்,
குலை வாழை - குலைகளையுடைய வாழையினையும்,

17. காய் கமுகின் - காயையுடைய கமுகினையும்,
கமழ் மஞ்சள் - மணநாறும் மஞ்சளினையும்,

18. இனம் மாவின் - இனமான மாமரங்களினையும்,
இணர் பெண்ணை - குலைகளையுடைய பனையினையும்,

19. முதல் சேம்பின் - அடிபரந்த சேம்பினையும் ,

முளை இஞ்சி - முளையினையுடைய இஞ்சியினையுமுடைய விளைவறாவியன் கழனி (8) என முன்னே கூட்டுக.

20 - 25. [அகனகர் வியன்முற்றத்துச், சுடர்நுதன் மடநோக்கி, 3 னேரிழை மகளி ருணங்குணாக் கவருங், கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை, பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு, முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் :]

சுடர் நுதல் 4 மடம் நோக்கின் (21) நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் (22) கோழி எறிந்த கொடு கால் கனம்குழை (23) - ஒளியையுடைய நுதலினையும் மடப்பம் பொருந்தின நோக்கினையும் பொருந்தின பூணினையுமுடைய மகளிர் உலருகின்ற நெல்லைத்தின்னும் கோழியை யெறிந்த வளைந்த இடத்தையுடைய பொன்னாற் செய்த மகரக்குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் (24) முக்கால் சிறு தேர்முன் வழி விலக்கும் (25) அகல் நகர் வியன் முற்றத்து (20) - பூண


கெழு செலவின் " (முருகு. 50) என்பதற்கும், ' மோடு - வயிறுமாம்' என்று எழுதினர் ; மோடி கழல் சூடியே " (தக்க. 241) என்பதற்கு அதனுரையாசிரியர், ' எல்லாரையும் பெற்ற வயிற்றையுடையானென்று மாம்' என்ற உரையும் இங்கே கருதத்தக்கது.

1 " கழா அமயிரி யாக்கைச் செங்கட் காரான், சொரிபுற முரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற, குமரிக் கூட்டில் " (சிலப். 10 : 121 - 3)

2 " கூடு கெழீஇய குடிவயினான் " (பொருந. 182) ; " குமரி மூத்த கூடோங்கு நல்லில் " (பெரும்பாண். 247) ; " பரந்துயர் நெற்கூடுகள் " (பெரிய. திருநா. 10)

3 நேர்தல் கொடைப்பொருளில் வருமென்பதற்கு இதனை மேற்கோள் காட்டினர் ; (யா - வி. சூ. 50)

4 மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை ;தொல். களவு. சூ. 8, ந.