533

ணிந்த தாளினையுடைய சிறார் 1 குதிரை பூட்டாமற் 2 கையாலுருட்டும் மூன்றுருளையையுடைய சிறுதேரினது வழியின்முன்பை விலக்கும் செல்வ மகன்ற மனையினது அகன்ற முற்றத்தையுடைய குறும்பல்லூர் (28) என்க.

26 - 7. [விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக், கொழும் பல்குடிச் செழும்பாக்கத்து :]

இஃது, இருஞ்செருவின் (72) விலங்குபகையல்லது கலங்குபகை யறியாப் பாக்கமென மேலேகூட்டிற்று.

28. குறு பல் ஊர் நெடு சோணாட்டு - ஒன்றற்கொன்று அண்ணி தாய்ப் பலவாகிய ஊர்களையுடைய பெரியசோழநாட்டில்,

சோழன் நாடென்பது 3 சோணாடென மரூஉமுடிபு.

சோழநாட்டுப்பட்டின (218) மென்க.

29 - 30. 4 வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய் பஃறி - வெள்ளிதாகிய உப்பினது விலையைச்சொல்லி விற்ற நெல்லைக் கொண்டு வந்த வலிய இடத்தையுடைய படகை,

பஃறி - ஓடமுமாம்.

31 - 2. பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும் கழி சூழ் படப்பை - பந்தியிலே நிற்றலையுடைய 5 குதிரைகளைப் பிணிக்குமாறு போலே சார்ந்த தறிகளிலே பிணிக்கும் கழிசூழ்ந்த பக்கத்தினையும்,

அணைமுதல் - அணையிடத்துத் தறியுமாம். படப்பை - தோட்டமுமாம்.

32 - 3. கலி யாணர் பொழில் புறவின் பூ தண்டலை - மனச் செருக்கு எழுதற்குக் காரணமான புதுவருவாயினையுடைய தோப்புக்களுக்குப் புறம்பாகிய பூஞ்சோலைகளையும்,

34 - 8. [மழைநீங்கிய மாவிசும்பின், மதிசேர்ந்த மகவெண்மீ, னுருகெழுதிற லுயர்கோட்டத்து, முருகமர்பூ முரண்கிடக்கை, வரியணி சுடர் வான்பொய்கை :]


1 குதிரை பூட்டப்பட்ட சிறுதேருமுண்டென்பது, " தச்சன் செய்த சிறுமா வையம் " (குறுந். 61 : 1) என்பதனாலறியப்படும்.

2 " கால்வறேர் கையினியக்கி " (கலித். 81 : 8)

3 " சோழனாடு சோணாடென அன்கெட்டு முடிந்தது " (தொல். குற்றியலுகரப். சூ. 79, ந.)

4 உப்பை நெல்லுக்கு விற்றல் : " உப்புநொடை நெல்லின் ", நெல்லு முப்பு நேரோ யூரீர், கொள்ளீ ரோவெனச் சேரிதொறு நுவலும் " (அகநா. 60 : 4. 390 : 8 - 9)

5 குதிரை படகிற்கு உவமை : " செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர் , நெறிதரு புரவியின் மறிதருந்திமில் " (யா - வி. சூ. 86, மேற் ' மணிகிளர் நெடுமுடி')