மழை நீங்கிய மா விசும்பில் (34) மதிசேர்ந்த மகம் வெள் மீன் (35) உருகெழு திறல் உயர் கோட்டத்து (36) வான் பொய்கை (38) - மழை மாசுநீங்கின பெரிய ஆகாயத்திடத்து மதியைச்சேர்ந்த 1 மகமாகிய வெள்ளியமீனினது வடிவு பொருந்தின வலியை யுடைய உயர்ந்த கரையையுடைய நன்றாகிய பொய்கைகளையும், 2 மதியும் மீனும் பொய்கைக்கும் கரைக்கும் உவமிக்கும் பொருள். இனி உயர்கோட்டத்தை, எல்லாரும் மதியைச்சேர்ந்த மகவெண்மீனைப் பார்க்கைக்கு இடமாகிய கோயிலாக்கிக் 3 கோயிலும் பொய் கையுமென எண்ணுதலுமாம். இனிப் பொய்கைக்கரையிலே கோயிலாக்கிக் கோயிலும் பொய்கையும் மதிசேர்ந்த மகவெண்மீன் போன்ற வென்றுமாம். முருகு அமர் 4 பூமுரண் கிடக்கை (37) வரி அணி சுடர் பொய்கை (38) - மணம்பொருந்தின பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்ட பரப்பாலே பல நிறமணிந்த ஒளியினையுடைய பொய்கை, 39. இரு காமத்து இணை ஏரி - இம்மையிலும் மறுமையிலுமுண்டாகிய காமவின்பத்தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகளையும், அது , " சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக், காமவேள் கோட்டந் தொழுதா கணவரொடுந், தாமின் புறுவ ருலகத்துத் தையலார், போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் " (சிலப். 9 : 59 - 62) என்றதனானுமுணர்க. (?) இனி 5 வளகாமரேரி வணிகாமரேரி யென்றும், சங்கிராமகாமம் 6 வணிக்கிராம காமமென்று முரைப்ப. 40 - 41. 7புலி பொறி போர் கதவின் திரு துஞ்சும் திண் காப்
1 மகநாள் முடநுகம் போல்வதாகலின், கரைக்கு உவமையாயிற்று. 2 " ஏரி வளாவிக் கிடந்தது போலு மிளம்பிறையே" (திருநா. தே.); "தேய்பிறை யுருவக் கேணி" (சீவக. 2998) 3 " நிக்கந்தக் கோட்ட நிலாக்கோட்டம் புக்கு " (சிலப். 9 : 13) என்பதனாலும் காவிரிப்பூம்பட்டினத்தில் மதிக்குக் கோயிலுண்மை அறியலாகும். 4 " முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கை " (பெரும்பாண். 294) என்பதற்கும் இவ்வாறே உரையெழுதினர். 5 (பி - ம்.) ' இனிக் கவளகாமரேரி இனி வணிகாமரேரி' 6 மணிக்கிராமம் என்று திருவெண்காட்டின் பக்கத்தில் ஓர் ஊர் உண்டு. 7 அரசர் கதவுகளில் தம் அடையாளத்தைப் பொறித்தல் : " ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின், பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை ", "விடர்ப்புலி பொறித்த கோட்டை " (புறநா. 33 : 8 - 9, 174 : 17) ; " போற்றி மன்னநம் பொன்னங் கயற்குறி, மாற்றி யுத்தர வாயிற் கதவதில், ஏற்றி லச்சினை யிட்டனர் யாரையென், றாற்றல் வேந்தவறிகிலம் யாமென்றார்" (திருவிளை. 34 : 22)
|