535

பின் - 1 புலியாகிய அடையாளத்தினையும் பலகைகள் தம்மிற் சேருதலையுடைய கதவினையுமுடைய திருமகள் தங்கும் திண்ணிய மதிலினையும்,

42 - 50. [ புகழ்நிலைஇய மொழிவளர, வறநிலைஇய வகனட்டிற், சோறுவாக்கிய கொழுங்கஞ்சி, யாறுபோலப் பரந்தொழுகி, யேறுபொரச் சேறாகித், தேரோடத் துகள்கெழுமி, நீராடிய களிறுபோல, வேறுபட்ட வினையோவத்து, வெண்கோயின் மாசூட்டும் :]

சோறு வாக்கியகொழு கஞ்சி (44) யாறு போல பரந்து ஒழுகி (45) - சோற்றை வடித்தொழுக்கிய கொழுவிய கஞ்சி யாறுகள்போல எங்கும் பரந்தொழுகி,

ஏறு பொர சேறாகி (46) - இடபங்கள் தம்மிற்பொருகையினாலே பின்பு சேறாய்,

தேர் ஒட துகள் கெழுமி (47) - பல தேர்களும் ஓடுகையினாலே தூளியாய்ப் பொருந்தி,

வேறு பட்ட வினை ஓவத்து (49) வெள் கோயில் (50) - வேறுபட்ட தொழில்களையுடைய 2 சித்திரங்களையுடைய வெள்ளிய கோயில்களை,

நீறு ஆடிய களிறு போல (48) மாசு ஊட்டும் (50) - புழுதியை மேலே பூசிக்கொண்ட யானையைப்போல அழுக்கேறப்பண்ணும்,

கஞ்சி ஒழுகிச் சேறாகிக் கெழுமிக் கோயிலை மாசூட்டுதற்குக்காரணமாகிய அட்டிலெனக்கூட்டுக.

புகழ் நிலைஇய மொழி வளர (42) அறம் நிலைஇய அகல் அட்டில் 43) - இம்மைக்குப் புகழ் நிலைபெற்றசொல் எங்கும் பரவாநிற்க மறுமைக்கு அறம் நிலைபெற்ற அகன்ற அட்டில்,

இருமையினும்பெறும் பயனுண்டாகச் சோறிடும் சாலையென்றவாறு.

51 - 2. தண் கேணி தகை முற்றத்து பகடு எருத்தின் பல சாலை - குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தினையுடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பலசாலையினையும்,

53. தவம் பள்ளி - 3 தவஞ்செய்யும் அமண்பள்ளி பௌத்தப் பள்ளிகளையும்,

53 - 8. [ தாழ்காவி, னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு, மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம், மாயிரும் பெடையோ டிரியல் போகிப், பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த், தூதுணம் புறவொடு துச்சிற்சேக்கும் :]


1 புலி யடையாளம் : " கொடுவரி, யொற்றிக்கொள்கையிற் பெயர்வோற்கு " (சிலப். 5 : 98) ; நேரியன்பதா கையிற் புலி" (தக்க. 156)

2 " மாடக்குச் சித்திரமும் " (நன். பொதுப். 55)

3 காவிரிப்பூம்பட்டினத்தே இவ்விருவகைப் பள்ளிகளும் முற்காலத்திருந்தமை, மணிமேகலை, 5 - ஆங்காதையாலும் உணரப்படும்.