536

1 அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் (54) 2 ஆவுதி நறு புகை முனைஇ குயில் தம் (55) மா இரு பெடையோடு இரியல் போகி (56) - விளங்குகின்ற சடையினையுடைய இருடிகள் தீயின்கண்ணே வேட்டலைச் செய்யும் 3 நெய்முதலியவற்றின் நறிய புகையை வெறுத்துக் குயில்கள் தம்முடைய கருமையையும் பெருமையையுமுடைய பேடைகளுடனே கெடுதலையுடையவாய் நீங்கிப்போய்,

பூதம் காக்கும் புகல் அரு கடி நகர் (57) தூது உண் அம் புறவொடு 4 துச்சில் சேக்கும் (58) தாழ் காவின் (53) - பூதங்கள் வாசலிலே காத்திருக்கும் புகற்கறிய அச்சத்தையுடைய காளிகோட்டத்திடத்திற் 5 கல்லைத்தின்னும் அழகிய புறவுகளுடனே குடியிருப்பாகத்தங்கும் இளமாக்காவினையும்,

முனிவரைத் தன்னிடத்தே கொண்டிருத்தலிற்காக்காரணமாயிற்று.

59 - 77. [ முதுமரத்த முரண்களரி, வரிமண லகன்றிட்டை, யிருங்கிளை யினனொக்கற், கருந்தொழிற் கலிமாக்கள், கடலிறவின் சூடு தின்றும், வயலாமைப் புழுக்குண்டும், வறளடும்பின் மலர்மலைந்தும், புனலாம்பற் பூச்சூடியு, நீனிற விசும்பின வலனேர்பு திரிதரு, நாண்மீன் விராய கோண்மீன் போல, மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக், கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர், கல்லெறியுங் கவண்வெரீஇப், புள்ளிரியும் புகர்ப்போந்தைப், பறழ்ப்பன்றிப் பல்கோழி, யுறைக்கிணற்றுப் புறச்சேரி, மேழகத் தகரொடு சிவல்விளை யாட :]


1 " அவிர்சடை முனிவரு மருள " (புறநா. 43 : 4)

2 " புக்காவுதிகள் பலவேற்றும் " , " வேள்வியாவுதி யுண்ணவோ" (தக்க. 46, 252)

3 " நீர்நாண நெய்வழங்கியும் " (புறநா. 166 : 21)

4 " புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட் டுச்சி லிருந்தவுயிர்க்கு " (குறள், 340) ; " துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே" (இனியது நாற்பது, 39)

5 " தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் " (கலித். 56 : 16) ; "பொறிவரிப் புறவின் செங்காற் சேவல், சிறுபுன் பெடையொடு சேட்புலம் போகி, யரிமண லியவிற் பரறேர்ந் துண்டு" (அகநா. 271 : 1 - 3) ; " கல்லுண்டு கடிய வெம்புங் கானுறை புறவ மெல்லாம்" (சீவக. 1430) ; " நுண்பொறிப் புறவின் செங்காற் சேவல் , வெண்சிறைப் பெடையொடு விளையாட்டு விரும்பி, வன்பர லார்ந்த வயிற்ற வாகி " (பெருங். 1. 52 : 46 - 8) ; " தூதுணம் பறவைக டூதுண் டோவறக், காதலந் துணையொடு கழுமிப் புல்லுவ " , " கல்லிரை தோனும் வீழ்துணை நீங்கினுங் கபோதகநோ, யல்லிரை யோத மனையது " (தணிகைப். நாட்டு. 52, களவுப். 609)