538

மாக்கள் தின்றும் உண்டும் மலைந்தும் சூடியும் விளையாடும்படி மீன் போற் குழீஇ யென்க.

இகல் மொய்ம்பினோர் (72) பெரு சினத்தால் (71) வரி மணல் அகல் திட்டை (60) இரு கிளை (61) முது மரத்த முரண் களரி (59) புறக்கொடாது (71) கையினும் கலத்தினும் மெய்உற தீண்டி (70) இருசெருவின் (72) விலங்கு பகை அல்லது (26) கொழு பல் குடி (27) கலங்கு பகை அறியா (26) செழுபாக்கத்து (27) - அங்ஙனம் பொருவித்தலிற் றோன்றும் மாறுபாடுசெய்யும் வலியினையுடையராய் ஆண்டுப் பிறந்த பெரிய சினத்தாலே அறலினையுடைத்தாகிய மணலினையுடைய அகன்ற மேட்டில் பெரிய கிளைத்தலையுடைய பழையமரத்தையுடையவாகிய பொருதற்குச் சமைந்த போர்க்களத்தேசென்று முதுகு கொடாமற் கையாற் குத்தியும் படைக்கலங்களாலே வெட்டியும் ஒருவர் மெய்யோடு ஒருவர் மெய் உறும்படி கலந்துபொரும் பெரிய போரை 1 விலங்குகின்ற பகையல்லது செருக்கினையுடைய பலகுடி கலங்கி எழுந்திருத்தற்குக் காரணமான 2 பகையை அறியாத பாக்கங்களையும், பாக்கம் - கடற்கரையிலூர்கள்.

பறழ் பன்றி பல் கோழி (75) உறை கிணறு புறம் சேரி (76) - குட்டிகளையுடைய பன்றிகளையும் பலசாதியாகிய கோழிகளையும் 3 உறைவைத்த கிணறுகளையுமுடைய இழிகுலத்தோரிருக்குந் தெருவுகளையும்,

78 - 9. [ கிடுகுநிரைத் தெஃகூன்றி, நடுகல்லி னரண்போல :] நடுகல்லின் அரண்போல கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி - 4 நடுகல்லினிற்கின்ற தெற்வமாயவனும் அவனுக்குவைத்த 5கிடுகும் வேலும்போலக் கிடுகை நிரைத்து வேலையூன்றிப் புறக்கொடாது (71) என முன்னே கூட்டுக.

அரண் : ஆகுபெயர்.


1 "விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் " (புறநா. 230 :4)

2 "முனைதரு பூசல் கனவினு மறியாது " (புறநா. 42 : 9) என்பதும், "பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய " (சிலப். 1 : 15) என்பதும், 'பதி யெழுவறியா - பதியினின்றும் பெயர்தலையறியாத ; எனவே பகையின்மை கூறிற்று ' என்னும் அதன் விசேடவுரையும் இங்கே ஒப்பு நோக்கற்பாலன.

3 உறையைக் குடலையென்பர் ; தக்க. 127, உரை.

4 "கைவண் குரிசில்கற் கைதொழுஉச் செல்பாண , தெய்வமாய் நின்றான் றிசைக்கு " (பு. வெ. 252)

5 வேலும் கிடுகும் சேர்த்துக் கூறப்படுதல் : " நெய்கனி நெடுவே லெஃகி னிமைக்கு, மழைமருள் பஃறோல் ", " மணியணி பலகை மாக்காழ் நெடுவேல் " (அகநா. 123 : 9 - 10, 369 : 18)