உண்டு ஆடியும் (93) - 1 நெற்கள்ளையுண்டு விளையாடியும், 94. புலவு மணல் பூ கானல் - புலானாற்றத்தையுடைய மணலிடத்தே பூக்களையுடைய கடற்கரையிற் குடி (81) என்க. 95. 2 மா மலை அணைந்த கொண்மூ போலவும் - கரியமலையைச் சேர்ந்த செக்கர்மேகம் போலவும், 96. தாய் முலை தழுவிய குழவி போலவும் - தாயுடைய முலையைத் தழுவிய பிள்ளையைப் போலவும், இஃது ஒன்றுபடுதற்கு உவமை. 97. தேறு நீர் புணரியொடு யாறு தலைமணக்கும் - தெளிந்த கடலிற்றிரையோடே காவிரி தலைகலக்கும், 98. [ மலியோதத் தொலிகூடல் :] ஓதத்து ஒலி மலி கூடல் - ஓதத்தினால் ஒலிமலிந்த புகார்முகத்தே , 99. தீது நீங்க கடல் ஆடியும் - தீவினைபோகக் கடலாடியும், 100. மாசு போக புனல் படிந்தும் - உப்புப்போக நீரிலே குளித்தும், 101. 3 அலவன் ஆட்டியும் - ஞெண்டுகளை ஆட்டியும், 4 உரவுதிரைஉழக்கியும் - பரக்கின்ற திரையிலே விளையாடியும், 102. பாவை சூழ்ந்தும் - 5 பாவைகளைப்பண்ணியும்,
1 இந்தக்கள் தோப்பி யென்று கூறப்படும் ; " இல்லடு கள்ளின் றோப்பி பருகி - இல்லிலே சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்ளையுண்டு " (பெரும்பாண். 142 ந.) ; "தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் " (அகநா. 35 : 9 ) என்பதனுரையில், ' தோப்பிக்கள் - நெல்லாற் செய்யுங்கள் ' என்று எழுதியிருப்பதும் இங்கே அறியற்பாலது. 2 மலை திரைகளுக்கு உவமை : " மைவரை போற்றிரை யோடு கூடி ", " குன்றுபோற் றிரைகள் " (தே. திருஞா.) ; " மலைக்கு நிகரொப்பன வன்றிரைகள் " , " தடமால் வரைபோற் றிரைகள் " (தே. சுந்தர.) 3 அலவனாட்டல் : " பொன்வரி யலவ னாட்டிய ஞான்றே " , " ஓரை மகளி ரோராங் காட்ட, வாய்ந்த வலவன் " (குறுந். 303 : 7, 316 : 5 -6) ; " கோதைய, டிணிமண லடைகரை யலவ னாட்டி " (அகநா. 280 : 2 - 3) 4 "திரையுழந் தசைஇய நிரைவளை யாயமொடு " (அகநா. 190 :1) 5 "பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும், பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்தும் " (குறுந். 276 : 1 - 2); " பைஞ்சாய்ப் பாவை யீன்றனன்
|