பல் பொறி மருண்டும் - ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும், 103. அகலா காதலொடு பகல் விளையாடி - நீங்காத விருப்பத்துடனே பகற்பொழுதெல்லாம் விளையாடி, பரதவர் (90) உவவுமடிந்து (93) மகளிரோடேகூடிக் (91) குடிநாப்பண் (81) மனையிடத்தே சேர்த்திய அணங்கினாற் (87) கோதையராய் (85) மலைந்தும் (88) மாந்தியும் (89) ஆடியும் (93) பின்னர்க் கூடலிலே (98) தீதுநீங்க ஆடியும் (99) படிந்தும் (100) ஆட்டியும் உழக்கியும் (101) சூழ்ந்தும் மருண்டும் (102) காதலொடு பகல்விளையாடி (103) எனமுடிக்க. 104 - 17. [ பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும், பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத், துணைப்புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகிலுடுத்து, மட்டுநீக்கி மதுமகிழ்ந்து, மைந்தர் கண்ணி மகளிர் சூடவு, மகளிர் கோதை மைந்தர் மலையவு, நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக், கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும், பாடலோர்த்து நாடக நயந்தும், வெண்ணிலவின் பயன்றுய்த்துங், கண்ணடைஇய கடைக்கங்குலான், மாஅகாவிரி மணங்கூட்டுந், தூஉவெக்கர்த் துயின்மடிந்து :] பெறற்கு அரு தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் (104) நெடு கால் மாடத்து (111) - பெறுதற்கரிய பழைய தலைமையினையுடைய சுவர்க்கத்தையொக்கும் நெடிய கால்களையுடைய மாடத்திடத்தேயிருந்து, 1 பாடல் ஓர்த்து நாடகம் நயந்தும் (113) வெள் 2 நிலவின் பயன் துய்த்தும் (114) - பாட்டைக்கேட்டு நாடகங்களை விரும்பிக்கண்டும் வெள்ளிய நிலவிற் பெறும்பயனை நுகர்ந்தும், மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் (108) - கள்ளுண்டலைக் கைவிட்டுக் 3 காமபானத்தை உண்டு மகிழ்ந்தும், பட்டு நீக்கி துகில் உடுத்தும் (107) - பட்டுடுத்தவற்றை நீக்கிப் புணர்ச்சிக்காலத்துக்கு நொய்யவாகிய வெள்ளியவற்றையுடுத்தும்,
யானே " (ஐங். 155 : 5) ; " பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந்தனைத்தற்கோ " (கலித். 76 : 6) ; " சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்தும் " (கல்லாடம்) 1 " கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம, விளை பய னினிதிற் றுய்த்து " (சீவக. 2598) என்றவிடத்து இங்கே கூறப்பட்ட மூவகைச் செயல்களும் ஒருங்கே கூறப்பட்டமை கருதற்குரியது 2 நெடுநல். 95, குறிப்புரை. 3 மதுரைக். 779 - 81, ந. குறிப்புரை.
|