118 - 41. [வாலிணர் மடற்றாழை, வேலாழி வியன்றெருவி, னல்லிறைவன் பொருள்காக்குந், தொல்லிசைத் தொழின்மாக்கள், காய்சினத்த கதிர்ச்செல்வன், றேர்பூண்ட மாஅபோல, வைகறொறு மசைவின்றி, யுல்குசெயக் குறைபடாது, வான்முகந்தநீர் மலைப்பொழியவு, மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு, மாரி பெய்யும் பருவம் போல, நீரினின்று நிலத்தேற்றவு, நிலத்தினின்று நீர்ப்பரப்பவு, மளந்தறியாப் பல பண்டம், வரம்பறியாமை வந்தீண்டி, யருங்கடிப் பெருங்காப்பின், வலியுடைய வல்லணங்கினோன், புலிபொறித்துப் புறம்போக்கி, மதிநிறைந்த மலிபண்டம், பொதிமூடைப் போரேறி, மழையொடு சிமைய மால்வரைக் கவாஅன், வரையாடு வருடைத் தோற்றம் போலக், கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை, யேழகத் தகரோ டுகளு முன்றில் :]
வான் முகந்த நீர் மலை பொழியவும் (126) மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும் (127) மாரி பெய்யும் பருவம் போல (128) - மேகம் தான் முகந்தநீரை மலையிடத்தே சொரிதற்காகவும் மலையிற் சொரிந்த நீரை மீண்டு கடலிலே பரப்புதற்காகவும் மாரிக்காலத்தே பெய்கின்ற செவ்விபோல,
வான் எழுவாயாய்ப் பெய்யுமென்னும் பயனிலைகொண்டது.
வான் இணர் மடல் தாழை (118) வேலாழி வியல் தெருவில் (119) அரு கடி பெரு காப்பின் (133) வெள்ளிய பூங்கொத்துக்களையும் மடலினையுமுடைய தாழையையுடைய கரையினையுடைத்தாகிய கடலருகின் கண் இருக்கும் பரதவருடைய அகன்ற தெருவிடத்து அரிய (பி - ம். அகன்ற) 1 காவலையுடைய பண்டசாலையின்கண்ணே.
வரம்பு அறியாமை வந்து ஈண்டி (132) நிலத்தினின்றும் நீர்பரப்பவும் (130) - எல்லை யறியாதபடி வந்து திரண்டு பின்னர் அப்பண்டசாலையிலே நின்றும் கடலிலே ஏற்றுதற்காகவும்,
வல் அணங்கின் நோன் வலி உடை (134) புலி பொறித்து புறம்போக்கி (135) உல்கு செய் (125) மதி நிறைந்த மலி பண்டம் (136) - வலிய வருத்துந்தன்மையையுடைய 2 அச்சடையாளமாகிய வலியையுடைய புலியை அடையாளமாக இட்டுப் பண்டசாலைக்குப்புறம்பே
1 "வம்ப மாக்க டம்பெயர் பொறித்த, கண்ணெழுத்துப் படுத்த வெண்ணுப் பல்பொதி, கடைமுக வாயிலுங் கருந்தாழ்க் காவலு, முடையோர் காவலு மொரீஇய வாகிக், கடப்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக், கொட்பி னல்லது கொடுத்த லீயா, துள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் " (சிலப். 5 : 111 - 7)
2 அச்சு அடையாளம்.