544

புறப்படவிட்டுச் 1 சுங்கங்கொள்ளுதற்கு மதித்தற்றொழிலிற் குறையற்ற மிக்க பண்டங்களையும்,

நீரினின்றும் நிலத்து ஏற்றவும் (129) புலி பொறித்து புறம்போக்கி (135) உல்கு செய (125) அளந்து அறியா (131) மதி நிறைந்த (136) பல பண்டம் (131) - கடலினின்றும் பண்டசாலையிலே இறக்குதற்காகவும் புலிபொறித்து மரக்கலத்திற்குப் புறம்பே புறப்படவிட்டுச் சுங்கங்கொள்ளுதற்கு நெஞ்சாலே அளந்தறிந்து மதித்தல் நிறைந்த பல பண்டங்களையும்,

பரப்பவும் (130) ஏற்றவு (129) மென்னுமெச்சங்கள் புலிபொறித்து (135) என்னும் வினையொடு முடிந்தன.

பொதி 2 மூடை போர் ஏறி (137) - பொதிந்த பொதிகளடுக்கின போரிலேயேறி,

நீர் கடற்பரப்பவுமென்ற உவமைக்கு நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் நீர் மலைப்பொழியவுமென்ற உவமைக்கு நீரினின்று நிலத்தேற்றவும் பொருளாகக் கொள்க.

நல் இறைவன் பொருள் காக்கும் (120) தொல் இசை தொழில் மாக்கள் (121) காய் சினத்த கதிர் செல்வன் (122) தேர் பூண்ட மா போல (123) வைகல் தொறும் அசைவு இன்றி (124) குறை படாது உல்கு செய (125) - நல்ல அரசனுடைய பொருளைப் பிறர்கொள்ளாமற் காக்கும் பழையபுகழினையுடைய சுங்கங்கொள்வோர் எரிகின்ற சினத்தையுடைய கிரணங்களையுடைய பகலவன் தேர்பூண்ட குதிரைகளைப்போல ஒருபொழுதும் மடிந்திராது நாடோறும் இளைப்பின்றித் தாழ்வின்றாகச் சுங்கங்கொள்ள,

இதனை 3இருவகைப் பண்டங்களுக்குங் கூட்டியுரைக்க.

மழை ஆடு சிமையம் மால் வரை கவாஅன் (138) வரை ஆடு 4வருடை தோற்றம் போல (139) - மழையுலாவும் சிகரத்தையுடைய


1 சுங்கம் : " மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி " (விக்கிரம. உலா, 26) ; " தவிராத சுங்கந் தவிர்த்தகோன் " (குலோத். உலா, 26) ; " கலகமுஞ் சுங்கமுங் காய்கலிவு மாற்றி, யுலகைமுன் காத்த வுரவோன் " (இராசராச. உலா, 26)

2 மூடை - மூட்டை ; " கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்கும் " (பொருந. 245)

3 இருவகைப் பண்டங்கள் - பண்டசாலையிலிருந்து கப்பலில் ஏற்றப்படுவனவும் கப்பலிலிருந்து பண்டசாலையிலிறக்கப்படுவனவும்.

4 வருடை - மலையில் வாழும் ஒருவிலங்கு ; " கருங்கலை, கடும்பாட்டு வருடையொடு தாவன வுகளும், பெருவரை " , " அவன்மலைப், போருடை வருடையும் பாயாச், சூருடை யடுக்கத்த " (நற். 119 : 6 - 8, 359 : 7 - 9) ;