வாகிய பெரிய மூங்கிலையும் பக்கமலையினையுமுடைய மலையிடத்தேயுலாவும் வருடைமானின் தோற்றரவு போல, கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை (140) ஏழகம் தகரோடு உகளும் முன்றில் (141) - கூரிய உகிரையுடைய நாயில் வளைந்த காலையுடைய ஏறானவை மேழகக் கிடாயோடே குதிக்கும் பண்டசாலையின் முற்றத்தினையும், 1 ஏற்றை தகரோடே இருவகைப் பண்டங்களையும் பொதிந்த மூடைப்போரேறி உகளுமுற்றமென்க. 142 - 3. குறு தொடை நெடு 2 படிக்கால் கொடு திண்ணை - அணு கினபடிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தின சுற்றுத் திண்ணையினையும், 143. பல் 3 தகைப்பின் - பலகட்டுக்களையும், 144. புழை - சிறுவாசலையும், வாயில் - பெரியவாசலையும்,
" நெடுவரை மிசையது குறுங்கால் வருடை " (ஐங். 287 : 1 ) ; " வரைவாழ் வருடைக், கோடுமுற் றிளந்தகர் " (அகநா. 378 : 6 - 7) ; " வரைபாய் வருடை " (தொல் தொகைமரபு, சூ. 15, ந. மேற்.) ; " மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர் - முதுகிடத்தே கொண்ட நிலத்தைக் கைக்கொள்ளுஞ் செலவினையுடைய வளைந்த காலையுடைய வரையிடத்தே வாழும் எண்கால் வருடையில் வலிய தலையினையுடைய பெரிய கிடாய் " (மலைபடு. 502 - 3, ந.) ; " வரையாடு வருடையும் " (சிலப். 25 : 51) ; " குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின் " (சீவக. 1899) ; "கிளையென்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன ; எண் காலவாயினும் மாவெனப்படுதலின் வருடை கிளையாயிற்று " (தொல். மரபு. சூ. 32, பேர்.) ; " எட்டுக்காலுடையன வருடை ; ஆறு காலுடையன கழிப்பாம்பு " (நீல. தரும. செய். 54, உரை) 1 "மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மாற்றுமற் றிடையிடை யெங்குங், கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே" (திருஞா. தே.) 2 " விண்ணோ, ரூர்புக வமைத்தபடிகால் " (கம்ப. ஊர்தேடு. 66) ; இதுபடுகாலெனவும் வழங்கும் ; " ஏணிப்படுகால் (பரி. 10 : 11) ; "இருளில் படுகால் - மயக்கமற்ற ஏணி " (சீவக. 2872, ந.) 3 " தாரருந்தகைப்பு - ஒழுங்குபாட்டையுடைய ஆண்டு வாழ்வார்க் கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டணம் " (பதிற். 64 : 7, உரை)
|