155 - 60. [ மகளிரொடு செறியத் தாஅய்க், குழலகவ யாழ்முரல, முழவதிர முரசியம்ப, விழவறா வியலாவணத்து, மையறு சிறப்பிற்றெய்வஞ் சேர்த்திய, மலரணி வாயிற் பலர் தொழு கொடியும் :] மை அறு சிறப்பின் சேர்த்திய (159) பலர் தொழு (160) தெய்வம் (159) - பிறப்பறுப்பதற்குக் காரணமான தலைமையையுடைமையாற் கோயில்களிடத்தே உண்டாக்கின பலருந் தொழும் தெய்வங்களுக்கும், மகளிரொடு செறிய தாஅய் (155) குழல் அகவ யாழ் முரல (156) முழவு அதிர முரசு இயம்ப (157) விழவு அறா வியல் ஆவணத்து (158) - பாடுமகளிரோடே பொருந்தப் பரந்து 1 வங்கியம் இசையையுண்டாக்க யாழ் வாசிக்க முழவு முழங்க முரசு ஒலிப்ப எடுத்த திருநாள் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினையும், மகளிரொடு செறிய எடுத்தவிழவென்க. சேவடி முதலியவற்றையுடைய சாயலோர் மாடங்களிற் சாளரங்களிற் பொருந்தி முன்கைகூப்பப் பலருந் தொழும் முருகவேளுக்கும் ஏனைத் தெய்வங்களுக்குமெடுத்த விழவறா வியலாவணமெனக் கூட்டுக. மலர் அணி வாயில் கொடியும் (160) - 2 இல்லுறைதெய்வம் மகிழ மலரணிந்த மனைவாசலிற் கட்டின கொடிகளும், 161 - 2. [வருபுன றந்த வெண்மணற் கான்யாற், றுருகெழு கரும்பி னொண்பூப் போல :] வரு புனல் தந்த வெள் மணல் கான் யாறு உரு கெழு கரும்பின் ஒள் பூ போல மேல் ஊன்றிய துகில் கொடியும் (168) - வருகின்ற நீர்கொண்டுவந்த வெள்ளிய மணலையுடைய காட்டாற்றுக்கரையினின்ற அழகுபொருந்தின கரும்பினது ஒள்ளிய பூவையொக்க மேலூன்றின துகிற்கொடியும், கான் - மணமுமாம். 3 கடைத்தெருவின் இரண்டு புறத்திற்கும் எடுத்த கொடிக்கும் யாற்றங்கரையும் கருப்பம்பூவும் உவமைகூறினார். 163 - 8. [கூழுடைக் கொழுமஞ்சிகைத், தாழுடைத் தண்பணியத்து, வாலரிசிப் பலிசிதறிப், பாகுகுத்த பசுமெழுக்கிற், காழூன்றிய கவிகிடுகின், மேலூன்றிய துகிற்கொடியும் :] கூழ் உடை கொழு மஞ்சிகை (163) -நெல்லையும் அரிசியையு முடைய அழகிய மஞ்சிகை, மஞ்சிகை - 4 கொட்டகாரமுமாம்.
1 வங்கியம் - புல்லாங்குழல் ; இதுவம்சமென்பதன்திரிபென்பர். 2 இல்லுறைதெய்வம் : மதுரைக். 164, 578, உரை ; நெடுநல். 43, உரை. 3 "கூலமறுகிற் கொடியெடுத்து நுவலு, மாலை சேரி " (சிலப். 6 : 131 - 3) 4 கொட்டகாரம் - ஒருவகைக் கட்டிட விசேடம் ; " அட்டில்,
|