548

தாழ் உடை தண் பணியத்து (164) 1 மஞ்சிகை (163) - தாழ் இடு தலையுடைய தண்ணிய பண்டங்களையுடைய மஞ்சிகை,

நெல்லுப்போல ஏனைப்பண்டங்கள் சிறந்தன அன்மையிற் 2 றண்ணியபண்டமென்றார். பண்டமெனவே உலகில் விற்கும் பண்டங்களெல்லாம் அடங்கின.

பாகு உகுத்த (166) மஞ்சிகை (163) - பாக்குவெற்றிலை சொரிந்த மஞ்சிகை,

இனி உகுத்தபாகெனமாறிச் சிந்தின பாகினையுடைய மஞ்சிகையென்றலுமாம்.

என்றது, கண்டுசர்க்கரைக் கட்டுப்பாகினை.

இதனைப் பசுமெழுக்கென்பதனோடு கூட்டி ஆப்பியென்பாருமுளர்.

பசு மெழுக்கின் (166) மஞ்சிகை (163) - புது மெழுக்கினையுடைய மஞ்சிகையிடத்தே,

வால் அரிசி பலி சிதறி (165) - வெள்ளிய அரிசியாகிய பலிகளைத் தூவி,

காழ் ஊன்றிய கவி கிடுகின் (167) மேல் ஊன்றிய துகில் கொடியும் (168) - கால்கள் நட்டுவைத்த கவிந்த சட்டங்களின்மேலே நட்டுவைத்த வெள்ளிய துகிற் கொடிகளும்,

கால்கள் - சட்டங்களைத் தாங்குவன.

சிதறி ஊன்றிய. மஞ்சிகையிற்கவிந்த கிடுகென்க.

169 - 71. பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் - பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையையுடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடிகளும்,

172. வெளில் இளக்கும் களிறுபோல - அசையாத கம்பத்தினை அசைக்கும் யானைபோலநின்று தூங்குநாவாய் (174),


கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளியென இவற்றுள் நீங்கி " (இறை. சூ. 21, உரை)

1 மஞ்சிகை - தொம்பை ; " ஆரியச் செப்பும் யவனமஞ் சிகையும், பொன்செய் பேழையொடு பொறித்தாழ் நீக்கி " (பெருங். 1. 32 : 76 - 7) ; இதனை மஞ்சூஷா என்னும் வடமொழித் திரிபென்பர்.

2 தண்ணிய - இழிந்த ; " தண்கான் - இழிந்தகாடு " (சிலப். 2 : 54 அடியார்.) ; " எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் , றண்பதத்தாற் றானே கெடும்" (குறள், 548)