552

மாக்கள் (217) பல் ஆயமொடு பதி பழகி (213) கலந்து இனிது உறையும் (217) மறுகின் (193) - இம்மாக்கள் பல திரளோடே இவ்வூரிடத்தேபழகி ஈண்டை நன்மக்களோடே கூடி நன்றாக இருக்கும் மறுகென முன்னே கூட்டுக.

இவர்களிருத்தலின், வளந்தலை மயங்கிய மறுகுகளாயின.

கிளை கலித்து பகை பேணாது (196) வலைஞர் முன்றில் மீன பிறழவும் (197) விலைஞர் குரம்பை மா ஈண்டவும் (198) கொலை கடிந்தும் களவு நீக்கியும் (199) - மீன் திரளும் விலங்கின் திரளும் செருக்கி வலையாற் பிடிப்பாரையும் கொன்று இறைச்சி விற்பாரையும் தமக்குப் பகையாகக்கருதி யஞ்சாதே வலைஞர் முற்றத்தே அம்மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும் விலைஞர் குடிலிலே அவ்விலங்குகள் கிடக்கும்படியாகவும் முற்படக் கொலைத் தொழிலை அவர்களிடத்தினின்றும் போக்கியும் பின்னர்க் களவு காண்பாரிடத்துக் களவுத் தொழிலைப் போக்கியும்,

அமரர் பேணியும் (200) - தேவர்களை வழிபட்டும்,

ஆவுதி அருத்தியும் (200) - யாகங்களைப்பண்ணி அவற்றான் ஆவு திகளை அவர் நுகரப்பண்ணியும்,

நல் ஆனொடு பகடு ஓம்பியும் (201) - நல்ல பசுக்களோடு எருதுகளைப் பரிகரித்தும்,

" வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை " (தொல். மரபு. சூ. 77)

" மெய்தெரி வகையி னெண்வகை யுணவின் , செய்தியும் வரையா ரப்பாலான " (தொல். மரபு. சூ. 78) என்பவற்றால் (பி - ம். என்பதனால்) வாணிகர்க்கு 1 உழவுத் தொழிலுரித்தாகலிற் பகடோம்பியு மென்றார்.

2 யாகத்திற்குப் பசுவை ஓம்பியுமென்றார்.


1 " அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்தசெய்தியனவாகிய உழவுத்தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமு மென்பன, அவற்றின் ஒத்த சிறப்பினவன்றி அவற்றுள்ளும் ஒரோவொன்று ஒரோ வருணத்தாருக்கு உரியதாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினானென்பது. நிரைகாவலும் உழவுத் தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறுதல் போலாது...............இச்சூத்திரங்களா னென்பது " (தொல். மரபு. சூ. 80, பேர்.)

2 " தீம்பா லொழுகப் பொழுதுதொறு மோம தேனுச் செல்வனவும்", " பூணுந் தொழில்வேள் விச்சடங்கு புரிய வோம தேனுக்கள், காணும் பொலிவின் முன்னையினு மநேக மடங்கு கறப்பனவா " (பெயரி. சண்டேசுர. 5, 29) ; " சுரபிவேறாய்விடின் பால் அக்கினி கோத்திரப்