553

நான்மறையோர் புகழ் பரப்பியும் (202) - அந்தணர்க்குண்டாம் புகழ்களைத் தாங்கள் அவர்க்கு நிலைபெறுத்தியும்,

புண்ணியம் (204) பண்ணி அட்டியும் (203) - பெரிதாகிய புண்ணியங்களைத் தாங்கள் பண்ணி அவற்றைச் செய்யமாட்டாதார்க்குத் தானம் பண்ணியும்,

அம் : அசை.

பண்ணியமட்டியு மென்றதற்குச் சோற்றை ஆக்கியிட்டு மென்பாருமுளர்.

1 பசு பதம் கொடுத்தும் (203) - விளைந்தநெல்லையும் பறிக்குங்கமுகையும் உணவாகக் கொடுத்தும்,

இதற்கு அரிசியும் கறியுங் கொடுத்து மென்பாருமுளர்.

முட்டா தண் 2 நிழல் வாழ்க்கை (204) - இங்ஙனஞ்செய்யும் அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய நன்னெஞ்சினோர் (207) என்க.

கொடு மேழி நசை உழவர் (205) நெடு நுகத்து பகல் போல (206) நடுவுநின்ற நல் நெஞ்சினோர் (207) - வளைந்த மேழியால் உழவுத் தொழிலை நச்சுதலையுடைய உழவரது நெடிய 3 நுகத்திற்றைத்த பகலாணிபோல நடுவுநிலையென்னுங்குணம் நிலைபெற்ற நன்றாகிய நெஞ்சினையுடைதயோர்,

என்றது, ஆண்டுறையும் 4 வேதவாணிகரை

5 தம (209) பல் பண்டமும் (211) பிற (209) பல் பண்டமும் (211) ஒப்ப நாடி (209) - தம்முடையவாகிய பலசரக்குக்களையும் பிறவாகிய பலசரக்குக்களையும் பொருளொப்ப ஆராய்ந்து,


பரப்புக்குப் போதாது ; அஃது இன்றி யொழியின் அவனுண்ணானென்பது ; அவன் வழியொழிகும் சுரபியைப் பறித்த தனாற் பயனிது " (தக்க. 488, உரை)

1 " உண்டாயிற் பதங்கொடுத், தில்லாயி னுடனுண்ணும் " (புறநா. 95 : 6 - 7)

2 நிழலென்பதற்கு அருளென்று ஈண்டுப் பொருள் எழுதியவாறே முன்னும் (பொருந. 149) எழுதினர்.

3 நுகம் - நுகத்தடி ; பகலாணி - அதன் நடுவே தைத்த ஆணி.

4 " மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன் " (சீவக. 1449) ; " வேதவணிகரல்லாதார் கலத்திற் பிரிவு வேதநெறியன்மையின் ஆராய்ச்சியின்று " (தொல். அகத்திணை . சூ. 11, .)

5 " பொற்போர் புரிவர் பிறர்பொருளுந் தமபோற் பேணிப் புரி வணிகர் " (பிரபு. மாயையுற்பத்தி. 15)