555

222. பிறர் பிணி அகத்து இருந்து பீடு காழ் முற்றி - பகைவர் காவலிடத்தேயிருந்து தனக்குப்பெருமை வயிரமாக முற்றி,

223 - 5. [ அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று, பெருங்கையானை பிடிபுக் காங்கு, நுண்ணிதி னுணர நாடி :]

நுண்ணிதின் உணர நாடி - தன்னுணர்வு கூரிதாக உணரும்படி இதுவே காரியமென்று ஆராய்ந்து,

பெரு கை யானை அரு கரை கவிய குத்தி குழி கொன்று பிடிபுக் காங்கு - பெரிய கையினையுடைய யானை தான் அகப்படப்பண்ணின குழியில் ஏறுதற்கு அரிய கரைகளை இடியும்படி கோட்டாலே குத்திக் குழியைத் தூர்த்துப் பிடியிடத்தே சென்றாற்போல,

225 - 6. [ நண்ணார், செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து :] நண்ணார் செறிவு உடை திண் காப்பு வாள் கழித்து ஏறி - அப்பகைவருடைய நெருங்கின திண்ணிய காவலாகிய வாட்படையை ஓட்டி அவ்விடத்தினின்றும் போந்து,

இனித் திண்காப்பிடத்தே வாளை உறைகழித்து வெட்டிப்போந்தென்றுமாம்.

227. உருகெழு 1 தாயம் ஊழின் எய்தி - அச்சம்பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று,

228. பெற்றவை மகிழ்தல் செய்யான் - தான் இறையாகப்பெற்ற அரசுரிமையால் மகிழ்ச்சிபொருந்துதல் செய்யானாய் மேலும் ஆசைமிக்கு,

228 - 38. [ செற்றோர் , கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின், முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா, ளுகிருடை யடிய வோங்கெழில் யானை, வடிமணிப் புரவியொடு வயவர் வீழப், பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத், தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு, வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் , பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச, மாக்க ணகலறை யதிர்வன முழங்க, முனைகெடச் சென்று முன்சம முருக்கி :]

முடி உடை கரு தலை புரட்டும் முன் தாள் (230) உகிர் உடை அடிய (231) - முடியையுடைய கரியதலைகளையுருட்டும் முன்காலின் உகிருடைய அடிகளையுடையவாய்,

தூறு இவர் 2 துறு கல் போல (234) உழிஞை சூடி (235) செற்றோர்


1 " தாய்வயிற் றிருந்து தாய மெய்தி " (பொருந. 132)

2 துறுகல் யானைக்கு உவமை : " மாசறக் கழீஇய யானை போலப், பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல் ", " கூழை யிரும்பிடிக்கைகரந் தன்ன, கேழிருந் துறுகல் ", " மாயிருந் துறுக, றுகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் ", " பொருத யானைப் புகர்முகங் கடுப்ப