556

(228) கடி அரண் தொலைத்த (229) யானையொடு (231) - தூறு படர்ந்த நெருங்கின மலைகள் போல உழிஞையைச்சூடிக் தம்மரசராற் போர்பெற்றாருடைய காவலையுடைய அரண்களையிடித்த யானைகளோடும்,

கதவு கொல் மருப்பின் (229) ஓங்கு எழில் யானை (231) - கதவை முறிக்கும் கொம்பினையும் உயர்ந்த அழகினையுமுடைய யானையென்க.

வடி மணி புரவியொடு (232) - வடித்த மணிகட்டின குதிரைகளோடும்,

போர் வேட்டு (234) - போரை விரும்பி,

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் (232) மா கண் அகல் அறை அதிர்வன முழங்க (237) - பேயின்கண்ணையொத்து முழங்குகின்ற காவலையுடைய முரசம் பெருமையை உடைத்தாகிய இடத்தையுடைய பாசறையிலே நடுங்குவனவாய் முழங்க,

அகலறை - மலைப்பக்கமுமாம்.

முனை கெட சென்று (238) - பகைப்புலம் கெடும்படி சென்று,

பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப (233) வயவர்வீழ (232) முன்சமம் முருக்கி (238) - பெரிய நல்லவானிடத்தே பருந்து உலாவித் திரியும்படியாக வீரர் படும்படி முற்பட்ட தூசியைக் கெடுத்து,

யானைகளோடும் (231) புரவிகளோடும் (232) போர்வேட்டு (234) முரசம் (236) முழங்கச் (237) சென்று (238) பருந்துலாய்நடப்ப (233) வயவர்வீழ (232) முருக்கி (238) யென்க.

239. தலை தவ சென்று - அப்பகைவரரணிடத்தே மிகநடந்து,

239 - 42. [தண்பணை யெடுப்பி, வெண்பூக் கரும்பொடு செந்நெனீடி, மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக், கரா அங் கலித்த கண்ணகன் பொய்கை :] 1வெள் பூ கரும்பொடு செந்நெல் நீடி 2குவளையொடு மா இதழ் நெய்தலும் மயங்கி கராம் கலித்த கண் அகன் பொய்கை தண் பணை எடுப்பி - வெள்ளிய பூக்களையுடைய கரும்புகளுடனே செந்நெல்லும் வளர்ந்து குவளையோடே பெருமையையுடைய இதழ்களையுடைய நெய்தலும் மயக்கப்பட்டு முதலைகள் செருக்கித்திரிந்த இடமகன்ற பொய்கைகளையுடைய மருதநிலத்துள்ள குடிகளை யோட்டி ,

243 - 4. [ கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச், செறுவும்


மன்றத் துறுகன் மீமிசைப் பலவுட, னொண்செங் காந்த ளவிழு நாடன் " (குறுந். 13 : 1 - 2, 111 : 4 - 5 , 279 : 5 - 6, 284 : 1 - 3)

1." நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும் " (நான்மணி. 9) ; " கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டி " (பு. வெ. 56)

2." மாமலர்க் குவளையு நெய்தலு மயங்கிய, கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சி " (மணி. 11 : 38 - 9)