வாவியு மயங்கி நீரற்று :] 1செறுவும் வாவியும் நீர் அற்று மயங்கி வேறு பல் பூளை (235) யொடு கொழு கால புதவமொடு செருந்தி நீடிசெய்களும் வாவிகளும் நீரற்றுத் தம்மில் ஒன்றாய் இருவகைப்பட்ட பலவாகிய பூளைகளோடே2கொழுவிய தண்டுகளையுடைய அறுகோடே கோரைகளும் வளரப்பட்டு, வேறுபல்பூளை இங்கேகூட்டிற்று;சிறுபூளையும் பெரும்பூளையுமுண்மையின் வேறுபல்பூளையென்றார். 245. அறு கோடு இரலையொடு மான்பிணை உகளவும் - அறல் பட்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடு மான்பிணை துள்ளிவிளையாடும்படியாகவும், தலைதவச்சென்று தண்பணையெடுப்பி (239) நீடி (240) உகளவும் (245) என்க. 246 - 9. [கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி, யந்தி மாட்டிய நந்தா விளக்கின் , மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ, வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில் :] கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி, மெழுக்கம் அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர் அணி கந்து உடை பொதியில் -3பகைவர்மனையோராய்ப் பிடித்துவந்த மகளிர்பலரும் நீருண்ணுந்துறையிலே சென்றுமுழுகி மெழுகும் மெழுக்கத்தினையும் அவர்கள் அந்திக்காலத்தே கொளுத்தின அவியாத விளக்கினையுமுடைய பூக்களைச் சூட்டின தரியினையுடைய அம்பலம், கந்து - 4 தெய்வமுறையுந் தறி.
1 பகைவர் நாட்டு நீர் நிலைகளில் யானையைப் படிவித்தலும் அவைகளை உடைத்தலும் வழக்கமாதலின், 'நீரற்று ' என்றார் ; " ஒளிறு மருப்பிற் களிறவர, காப்புடைய கயம்படியினை ". " கடிதுறைநீர்க் களிறுபடீஇ ", "வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக், களிறுபடிந்துண்டெனக் கலங்கிய துறையும் ", " துறைநீர்க், கைமான் கொள்ளுமோவென, வுறையுண் முனியுமவன் செல்லு மூரே " (புறநா. 15 : 9) ; "கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் , பெரும்புனல் வாய்திறந்த பின்னும் " (பு. வெ. 56) ; " எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத், தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ " (புறநா. 118 : 2 - 3 ) 2 " வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத், தூரறிய லாகா கிடந்தனவே - போரின், முகையவிழ்தார்க் கோதை முசிரியார் கோமான், நகையனல்வேல் காய்த்தினார் நாடு " (முத்.) 3 " கொற்றமன்ன மங்கைய, ரேத்தல்சான்ற கோயிலும் " (சீவக. 154) 4 " கந்துடை நிலையினும் " (முருகு. 226) ; " அருந்திறற் கடவு
|