வம்பலர் பலர் ஏறி தொழ சேக்கும்பொதியில் - புதியவர்கள் பலருமேறித் தொழுதற்குத்தங்கும் 1பொதியில், பொதியிலைமெழுகி விளக்கும் இட்டிருக்கவம்பமகளிரைவைத்தார், அதனால் அரசனாற்றற்குப்புகழுளதாமென்று கருதி, 250 - 51. பரு நிலை நெடு தூண் ஒல்க தீண்டிபெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் - அத்தெய்வமுறையும்அம்பலத்தினின்ற பருத்த நிலைமையினையுடைய நெடியதூண்சாயும்படி தம்முடம்பு உரிஞ்சிப் பெரிய நல்ல களிறுகளுடனேபிடிகள்கூடித் தங்கும்படியாகவும் , 252 - 5. [ அருவிலை நறும்பூத் தூஉய்த்தெருவின், முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த,திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும்,பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்து :]தெருவில் அரு விலை நறு பூ தூஉய் முதுவாய் கோடியர் முழவொடுபுணர்ந்த திரி புரி நரம்பின் தீ தொடை ஓர்க்கும்பெரு விழா கழிந்த பேஎ முதிர் மன்றத்து - ஆண்டுள்ளதெருவின்கண்ணே விலைகூறுதற்கரிய நறிய பூக்களைச்சிதறி அறிவு வாய்த்தலையுடைய கூத்தருடைய மத்தளத்திற்றாளத்தோடேகூடின முறுக்குதல்புரிந்த நரம்பின் இனிதாகிய கட்டினையுடையயாழைக் கேட்கும் பெரிய திருநாளின்றாகிய அச்சம்முதிர்ந்த மன்றத்திடத்தே, தூவி ஓர்க்குமென்க. தொடை : ஆகுபெயர். 256 - 7. [2 சிறுபூ நெருஞ்சியோடறுகை பம்பி, யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவும்:] 258. அழ குரல் கூகையோடு 3ஆண்டலைவிளிப்பவும் - இசைக்கு வருந்திக் கூப்பிடுகின்ற குரலையுடையகூகைகளுடனே கூடி ஆண்டலைப் புள்ளுக் கூப்பிடும்படியாகவும்,
டிருந்துபலிக் கந்தமும் " , "இலகொளிக் கந்தமும் " (மணி. 6 : 60, 24 : 162) ;" மரஞ்சேர் மாடத், தெழுதணி கடவுள் போகலிற்புல்லென், றொழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை", " மாத்தாட் கந்தின், சுரையிவர் பொதியிலங்குடிச்சீறூர், நாட்பலி மறந்த " , "புதலிவர் பொதியிற், கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து" (அகநா. 167 : 14 - 6, 287, 4 -6, 307 : 11 - 2) ; " கலிகெழுகடவுள் கந்தங் கைவிட " (புறநா. 52 : 12) 1.பொதியில் - அம்பலம் ; முருகு.226, ந. 2.இதற்குப் பழையவுரை கிடைக்கவில்லை; சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு அறுகம்புல்பரவப்பெற்றுக் கொடிய, வாயையுடைய நரிகள்பிறர்க்கு அச்சந்தோன்ற மிக்கு முழங்கவுமென்க. 3.முருகு - 227, ந. குறிப்புரையைப்பார்க்க.
|