259 - 60. கணம் கொள் கூளியொடுகதுப்பு இகுத்து அசைஇ பிணம் தின் யாக்கை பேய்மகள்துவன்றவும் - திரட்சிகொண்ட ஆண் பேய்களுடனே மயிரைத்தாழ்த்து இளைத்துப் பிணத்தைத் தின்னும்வடிவவையுடைய பேய்மகள் நெருங்கும்படியாகவும், 261. கொடு கால் - வளைந்த கால்களையுடையபேய்மகளென முன்னே கூட்டுக. 261 - 2. விருந்து மாடத்து நெடு கடை துவன்றிஉண்டு ஆனா பெரு சோறு அட்டில் - விருந்தினர் மாடத்திடத்துநெடிய தலைவாசலிலே முற்பட நெருங்கியிருந்து பின்புஉள்ளே சென்று உண்டு மிக்குக் கிடக்கின்ற பெரியசோற்றையுடைய அடுக்களை, 263 - 4. ஒள் சுவர் நல் இல் உயர்திணை இருந்து பைங்கிளி 1மிழற்றும் பால்ஆர் செழுநகர் - சாந்திட்ட சுவர்களையுடைய நன்றாகியஅகங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து பசியகிளி வார்த்தை சொல்லுதற்குக் காரணமாகிய பால்நிறைந்த வளவியவூர், திண்ணை : விகாரம். இனி, உயர்திணை - உயர்ந்த மேனிலமென்றுமாம். 265 - 7. [ தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக்,கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட, வுணவில் வறுங்கூட்டுள்ளகத் திருந்து :] கொடுவில் எயினர் தொடுதோல்அடியர் துடி பட குழீஇ கொள்ளை உண்ட உணவு இல் வறுகூடு உள்அகத்து இருந்து - கொடிய வில்லினையுடைய வேடர்செருப்புத் தொட்ட அடியினையுடையராய்த்துடியொலிப்பத்திரண்டு கொள்ளையாகக் கொண்டுண்டநெல் பின் இல்லையான வறுவிய கூட்டினுடைய உள்ளாகியஇடத்தேயிருந்து, 268. 2வளை வாய் கூகை நல் பகல்குழறவும் - வளைந்த வாயினையுடைய கூகை 3அடியொத்தகாலத்தே கூப்பிடும்படியாகவும், செழுநக (264) ரட்டிலிடத்துக் (262) கூட்டினுள்ளேயிருந்து (267) கூகை குழறவும் (268) என்க. 269 - 70. [ அருங்கடி வரைப்பி னூர்கவினழியப், பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற :] அருகடி வரைப்பின் ஊர் கவின் அழிய 4 மருங்கு அறபெரும் பாழ் செய்தும் அமையான் - அரிய காவலையுடைய
1.மிழற்ற லென்பதற்கு மெல்லக்கூறுதலென்றும் சில சொல்லுதலென்றும் உரை யெழுதுவர் :சீவக. 1626, 2339, ந. 2." நெடுநகர் வீழ்ந்தகரிகுதிர்ப்பள்ளிக், குடுமிக் கூகை குராலொடு முரல" (மதுரைக். 169 - 70.) 3. அடியொத்தகாலம் - நிழல் அடியோடுபொருந்தியகாலம் ; என்றது உச்சிக்காலத்தை ; "நிழலு , மடியகத் தொளிக்கு மாரழற் கானத்து " (திருவாரூர் .மும். 13) 4. மருங்கு - குலம் : " சூர் மருங்கு -சூரபன்மாவின் குலத்தை "
|