மதிலையுடைய பகைவர் படைவீடுகள்அழகழிய அவர்கள் குலமின்றாகப் பெரிய பாழாகப்பண்ணியதனாலும்செற்றம் ஆறானாய், பெற்றவை மகிழ்தல் செய்யானாய்(228) மேலும் ஆசைமிக்கு யானைகளோடும் (231)புரவிகளோடும் (232) போர்வேட்டு (234) முரசம் (236) முழங்கச்(237) சென்று முன்சமமுருக்கித் (238) தலைதவச் சென்றுஎடுப்பி (239) உகளவும் (245) உறையவும் (251) கதிர்ப்பவும்(257) விளிப்பவும் (258) குழறவும் (268) துவன்றவும் (260)பாழ்செய்தும் (270) ஊர்கவினழியப் (269) பாழ்செய்தும்அமையானாய் (270) என வினைமுடிக்க. பாழ் செய்தலை இரண்டிடத்தும் கூட்டுக. 271 - 2. மலை அகழ்க்குவனே கடல்தூர்க்குவனே வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என -இவன் தெய்வத்தன்மையுடையனாதலின் இம்மலைகளையெல்லாம்அகழ்தலைச் செய்வன் ; கடல்களையெல்லாம் தூர்த்தலைச்செய்வன் ; தேவருலகைக் கீழ்வீழ்த்தலைச் செய்வன்; காற்றை இயங்காமல் விலக்குவனென்று உலகத்தார் மேற்கூறும்படியாகத்துறைபோகலினென்க. பெரும்பாழ் செய்தும் அமையானாய்,இங்ஙனம் பாழ்செய்தவன் மேல் இவையுஞ் செய்வனென்றுகூறும்படியாகத் துறைபோனானென்றவாறு. 273. தான் முன்னிய துறைபோகலின் -தான் கருதிய போர்த் துறைகளெல்லாம்பொருதுமுடித்தானாகலின், 274. பல் ஒளியர் பணிபு ஒடுங்க - பலராகிய1 ஒளிநாட்டார் தாழ்ந்து தம் வீரங்குறைய, ஒளியராவர் மற்றை மண்டலத்திற்குஅரசராதற்குரிய வேளாளர். 275. தொல் அருவாளர் தொழில் கேட்ப- பழைய 2அருவாள நாட்டிலரசரும் தாங்கள் செய்யுந்தொழிலை வந்து கேட்ப, 276. வடவர் வாட - அதற்கு வடக்கு நாட்டிலுள்ள அரசர்குறைய, குடவர்கூம்ப - குடநாட்டிலுள்ளார் மனவெழுச்சி குறைய. 277- 91. [ தென்னவன் றிறல்கெடச்சீறி மன்னர், மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்,மாத்தானை மறமொய்ம்பிற், செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப்,புன்பொதுவர் வழிபொன்ற, விருங்கோவேண் மருங்குசாயக்,காடுகொன்று நாடாக்கிக் , குளந்தொட்டு வளம்
(முருகு. 275 ; பட்டினப். 282, ந.) 1.ஒளி நாடென்பது செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தில் ஒன்று ; தொல்.எச்ச. சூ. 4, சே. ந. 2.இது அருவா நாடெனவும் வழங்கும் ;இதுவும் மேற்கூறிய பன்னிரு நிலத்துள் ஒன்று.
|